IPL 2021 : நேற்றையை போட்டியில் சி.எஸ்.கே அணி தோற்க இந்த 3 விஷயங்கள் தான் முக்கிய காரணம் – விவரம் இதோ

- Advertisement -

நேற்று நடந்த இரண்டாவது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதிக் கொண்டனர். முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் 188 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்கள் அடித்தார். அவனைத் தொடர்ந்து மொயின் அலி 36, சாம் கரன் 34, ஜடேஜா 26 மற்றும் ராயுடு 23 ரன்கள் அடித்தனர். அதன் பின்னர் களமிறங்கிய டெல்லி அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்த இலக்கை வெறும் 18.4 ஓவர்களில் 190 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

sam curran

டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 85 ரன்கள் குவித்தார். அவருடன் விளையாடிய இளம் வீரர் பிரித்வி ஷா 72 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். 188 ரன்கள் அடித்தும் சென்னை அணியின் இந்த தோல்விக்கு மிக முக்கிய காரணங்களாக மூன்று காரணங்கள் பார்க்கப்படுகின்றன

- Advertisement -

பவர் பிளேயில் சொதப்பிய சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் :

நேற்று சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டுப்லஸ்ஸிஸ் மட்டும் ருத்ராஜ் களமிறங்கினர். ஆனால் நேற்று டுப்லஸ்ஸிஸ் டக் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து ருத்ராஜ் வெறும் 5 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் அடுத்தடுத்து வெளியேற ஆட்டத்தில் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாகவே சென்னை அணியால் முதல் ஆறு ஓவருக்கு வெறும் 33 ரன்கள் மட்டும் தான் குவிக்க முடிந்தது. ஒருவேளை இவர்களில் ஒருவர் நன்றாக விளையாடி இருந்தால் சென்னை அணி நிச்சயமாக 200 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும்.

- Advertisement -

Pant

மோசமாக பந்துவீசிய சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் :

சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சொதப்பியது போல பவுலர்களும் பவர் பிளே ஓவர்களில் விக்கெட்டினை கைப்பற்ற தவறியது மட்டுமின்றி அதிக அளவு ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஒட்டுமொத்தமாகவே பவுலர்கள் மிகப்பெரிய அளவில் சொதப்பினார்கள். டெல்லி அணியை முதல் 6 ஓவர்களில் 65 ரன்கள் எடுக்க வைத்து அவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டனர். முதல் 6 ஓவர்களில், சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் மிக நல்ல முறையில் பந்துவீசி குறைந்தபட்சம் 40 ரன்களுக்குள் அவர்களைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.

dhawan

ஷிகர் தவான் மற்றும் பிரித்வி ஷா ஜோடியை பிரிக்க முடியாமல் தவித்த சென்னை அணி பந்து வீச்சாளர்கள் :

நேற்று சென்னை அணி தோற்பதற்கு மிக முக்கிய காரணமே முதல் விக்கெட்டை கைப்பற்ற மிகப்பெரிய அளவில் நேரம் எடுத்துக் கொண்டது தான். டெல்லி அணியின் முதல் விக்கெட்டை 14வது ஓவரில் தான் எடுக்க முடிந்தது. சென்னை அணி முதல் விக்கெட் எடுத்த வேளையில் டெல்லி அணி ஏற்கனவே 138 ரன்கள் எடுத்திருந்தது. ஓபனர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் மற்றும் ஷா அடுத்தடுத்து அரைசதம் அடித்து முதல் விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 138 ரன்கள் குவித்தனர். இவர்கள் இருவரின் பார்ட்னர்ஷிப்பை முதலிலேயே முடித்திருக்க வேண்டும். இவர்கள் இருவரின் விக்கெட்டை கைப்பற்ற முடியாததால் டெல்லி அணி மிக எளிதாக வெற்றி பெற்றது என ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement