பென் ஸ்டோக்ஸ்க்கு பதிலாக ராஜஸ்தான் அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

stokes

கடந்த திங்கட்கிழமை அன்று நடந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. போட்டியின் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது. அந்தப் போட்டியில் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த கிறிஸ் கெய்லின் விக்கெட்டை கைப்பற்றுவதற்கு, மிகவும் சிரமப்பட்டு ஒரு கேட்சை பென் ஸ்டோக்ஸ் பிடித்தார். அதன் விளைவாக அவரது இடது கைவிரல் உடைந்து விட்டது. காயம் மிகவும் பெரிதாக இருக்கும் நிலையில் ஐபிஎல் தொடர்களில் இருந்து பென் ஸ்டோக்ஸ் வெளியேறி உள்ளார்.

Stokes

இந்நிலையில் பென் ஸ்டோக்ஸுக்கு மாற்று வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எந்த வீரர்ரை வாங்குவது என ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மாற்று வீரரை தேர்ந்தெடுத்தால், நிச்சயமாக பின்வரும் மூன்று வீரர்களில் ஒருவரை தான் நிச்சயமாக எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

டேவிட் கான்வே :

நியூசிலாந்தைச் சேர்ந்த டேவிட் கான்வே சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மிகவும் அபாரமாக விளையாடினார். தொடர் முழுவதும் மிக அபாரமாக விளையாடிய டேவிட் அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். சமீபத்தில் பங்களாதேஷிற்கு எதிராக கூட அவர் மிகப்பெரிய அளவில் விளையாடினார். மொத்தமாக 14 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கான்வே 473 ரன்களை குவித்துள்ளார், அதில் 4 அரைசதங்கள் அடங்கும். டி20 போட்டிகளில் இவரது அவரேஜ் 59.13 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 151.12 ஆகும்.

ஓபனிங் வீரராக களமிறங்கி அதிரடியாக அழிக்கும் ஆற்றல் உடைய கான்வே, நிச்சயமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகப்பெரிய அளவில் உதவுவார். எனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை கைப்பற்றுவதற்கு யோசிக்கும் என்று நாம் நம்பலாம்.

- Advertisement -

மார்டின் குப்டில் :

நியூசிலாந்துக்கு டி20 தொடர் என்று வந்துவிட்டாலே மார்டின் குப்டில் பெயர் தானாக இணைந்து கொள்ளும். அந்த அளவுக்கு நியூசிலாந்து அணிக்காக டி20 தொடர்களில் விளையாடி கொடுத்தவர்.
டி20 போட்டிகளில் பொறுத்தவரையில் 98 ஆட்டங்களில் 2939 ரன்களை குவித்துள்ளார், இதில் 2 சதங்களும் 17 அரை சதங்களும் அடங்கும். டி 20 போட்டிகளை பொறுத்த வரையில் இவரது அவெரேஜ் 32.30 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 136.82 ஆகும். ஆனால் இவரை ஐபிஎல் தொடரில் விளையாட வைக்க அனைத்து அணைகளும் கடந்த சில ஆண்டுகளாகவே யோசித்து வருகின்றனர்.

ஒருவேளை மார்ட்டின் கப்டில் ராஜஸ்தான் அணியால் தேர்ந்தெடுக்கப் பட்டால் நிச்சயம் தன்னுடைய முழு பங்களிப்பை கொடுத்து, மிகப்பெரிய அளவில் உதவுவார். மேலும் ஐபிஎல் போட்டிகளுக்கு தானும் தகுதியானவர் என்பதை நிரூபிப்பார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Hales 1

அலெக்ஸ் ஹேல்ஸ் :

இங்கிலாந்து அணியை சேர்ந்த அலெக்ஸ் ஹேல்ஸ் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு நாள் மட்டும் இரண்டு தொடர்களில் மிக அபாரமாக விளையாடிய வீரர் ஆவார். சில பிரச்சனைகளால் தற்போது இங்கிலாந்து அணியால் புறக்கணிக்கப்பட்டு ஆன வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.
எனும் பிபிஎல் டி20 தொடரில், இதுவரை 47 போட்டிகளில் விளையாடியுள்ள அரசியல் 1474 ரன்கள் குவித்துள்ளார். பிபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 152.12 ஆகும். பிபிஎல் டி20 லீக் தொடரை பொறுத்தவரையில் மிக அபாயகரமான பேட்ஸ்மேன்களில் இவரும் ஒருவர்.

மேலும் டி20 போட்டிகளில் 60 போட்டிகளில் விளையாடியுள்ள அலெக்ஸ் 1644 ரன்களை குவித்துள்ளார், இதில் எட்டு அரை சதங்கள் மற்றும் ஒரு சதமும் அடங்கும். டி20 போட்டிகளில் பொறுத்தவரையில் இவரது பேட்டிங் அவரேஜ் 31.02 மற்றும் இவரது ஸ்ட்ரைக் ரேட் 136.66 ஆகும். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இவரை நிச்சயமாக கைப்பற்றினால், ஓப்பனிங்கில் மிகப்பெரிய அளவில் உதவுவார். அதிரடியாக ஆடி பவர் பிளே ஓவர்களை நிச்சயமாக தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.