- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருவேளை ஆப்கானிஸ்தான் தொடரில் இருந்து ரோஹித் விலகினால் – அவரது இடத்தை பிடிக்க காத்திருக்கும் 3 வீரர்கள்

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது வரும் ஜூன் 13-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை ஏற்கனவே பி.சி.சி.ஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

ரோஹித் சர்மாவின் இடத்தை நிரப்ப காத்திருக்கும் 3 வீரர்கள் :

ஆனால் இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஐ.பி.எல் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விராட் கோலி விலகியுள்ளார். அவரை தொடர்ந்து தற்போது மற்றொரு நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவும் விலக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் அவர் ஏற்கனவே ஐ.பி.எல் போட்டிகளின் போது காயம் காரணமாக பல போட்டிகளை தவறவிட்டார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக ரோகித் சர்மா மற்றும் ஹார்டிக் பாண்டியா ஆகியோரை பிசிசிஐ தங்களது உடற்தகுதியை நிரூபிக்க பெங்களூரு வருமாறு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் தற்போது வரை ரோகித் சர்மா பெங்களூரு செல்லவில்லை.

இதன் காரணமாக அவர் இந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை காயம் காரணமாக தவறவிட வாய்ப்பு இருக்கிறது. அப்படி ஒருவேளை ரோகித் சர்மா இந்த தொடரை தவறவிட்டால் அவருக்கு பதிலாக அவரது துவக்க வீரருக்காண இடத்தை பூர்த்தி செய்ய மூன்று வீரர்களுக்கு வாய்ப்புள்ளது. அவர்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியின் காயத்தால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு அடித்த ஜாக்பாட் – விவரம் இதோ

அந்த வகையில் ரோகித் சர்மாவின் இடத்தை நிரப்ப தேவ்தத் படிக்கல் மற்றும் தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றொரு இடதுகை அதிரடி ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகிய மூவர் போட்டிக்கு உள்ளனர். இதில் யாரை இந்திய அணியின் நிர்வாகம் தேர்வு செய்யும்? என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -