2 ஆவது டெஸ்ட் போட்டியில் நிச்சயமாக இந்த 3 பேருக்கும் இடம் கிடைக்காதாம் – லிஸ்ட் இதோ

IND
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மார்ச் மாதம் நான்காம் தேதி தொடங்கிய முதலாவது டெஸ்ட் போட்டி மூன்று நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. அந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

INDvsSL cup

- Advertisement -

அதனை தொடர்ந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்திய அணி நாளை மார்ச் 12ஆம் தேதி இலங்கை அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையால் இந்திய அணியில் குறிப்பிட்ட மூன்று வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

அந்த வகையில் ஏற்கனவே முதல் போட்டியை வென்ற இந்திய அணி அப்படியே இறங்காமல் அணியில் ஒரேயொரு மாற்றமாக அக்சர் பட்டேல் மட்டும் இணைக்கப்பட உள்ளார். மற்றபடி வேறு எந்த வித மாற்றமும் இருக்காது.

Jayant 1

இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 3 வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போகவிருக்கிறது. அதன்படி துவக்க வீரராக இடம்பெற்றுள்ள சுப்மன் கில்க்கு வாய்ப்பு கிடைக்காது என்றும் அவருக்கு பதில் மாயங்க் அகர்வால் தொடர்வார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதேபோன்று சுழற்பந்து வீச்சாளரான ஜெயந்த் யாதவ் முதல் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாகவும் தற்போது அக்சர் படேல் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளதாலும் அவரே இந்த இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே இந்த 2ஆவது போட்டியில் ஜெயந்த் யாதவ்க்கு நிச்சயம் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்காது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பணவெறி தீராத பிசிசிஐ ! ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக நிகழும் மாற்றம் – விவரம் இதோ

மேலும் மூன்றாவதாக இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜுக்கும் நாளைய போட்டியில் வாய்ப்பு கிடைக்காது. ஏனெனில் இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கவுள்ளதால் பும்ரா மற்றும் ஷமி ஆகியோரே முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களாக அணியில் இடம் பிடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement