ரெய்னாவிற்கு பதிலாக சி.எஸ்.கே அணியின் துணைக்கேப்டனாக செயல்பட வாய்ப்பிருக்கும் 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Raina

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பிரச்சனைகள் மேல் பிரச்சனைகளாக வந்துகொண்டிருக்கிறது. சுரேஷ் ரெய்னா தொடரில் இருந்து வெளியேறியது, அதன் பின்னர் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது, அதன் பின்னர் ஹர்பஜன்சிங் தொடரில் இருந்து விலகியது என பல பிரச்சனைகள் இருந்து வருகிறது. இந்நிலையில் துணை கேப்டனாக இருந்த சுரேஷ் ரெய்னா வெளியேறியதால் அவருக்கு மாற்றாக வர இருக்கும் மூன்று பேர்களை பற்றி பார்ப்போம்

Bravo

டுவைன் பிராவோ :

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த பத்து வருடங்களாக விளையாடி வருபவர் டிவைன் பிராவோ. ஆல்ரவுண்டராக நின்று பல போட்டிகளில் வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார். ஏற்கனவே தனது வெஸ்ட் இண்டீஸ் அணியை 36 டி20 போட்டிகளிலும், 16 ஒருநாள் போட்டிகளிலும் வழி நடத்தியிருக்கிறார். தற்போது 36 வயதாகிறது இவருக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப் படலாம்

Faf

பாப் டூப்லஸ்ஸிஸ் :

- Advertisement -

இவர் தென் ஆப்பிரிக்க கேப்டனாக பல ஆண்டுகள் இருந்த அனுபவம் உடையவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த பல வருடங்களாக விளையாடி வருகிறார். தற்போது இவருக்கு 36 வயதாகிறது இவருக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறது

முரளி விஜய் :

தற்போது இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனிக்கு அடுத்து சீனியர் வீரர் இவர்தான். இரண்டு வருடங்கள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினாலும் அதன் பின்னர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக வாங்கப்பட்டு தற்போது இந்த அணியில் தான் ஆடிக் கொண்டிருக்கிறார். இவர் அணியில் பெரிதாக தற்போது ஆட முடியவில்லை இருந்தாலும் இவருக்கு துணை கேப்டன் பதவி கொடுக்கப்பட வாய்ப்பு அதிகம் இருக்கிறது.