IND vs AUS : முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள – 3 வீரர்கள் இதோ

Shreyas-Iyer
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஷ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார். அவரது இந்த விலகல் இந்திய அணிக்கு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான அணியில் ஏற்கனவே பும்ரா, ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடாததால் ஏற்கனவே சற்று சறுக்களை சந்தித்துள்ள இந்திய அணியானது அடுத்ததாக ஷ்ரேயாஸ் ஐயரையும் இழந்துள்ளது ஒரு சிறிய பின்னடைவை அளித்துள்ளது என்று கூறலாம்.

Bumrah Captain

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டியில் காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் அடுத்ததாக நடைபெற்ற நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இடம் பெறவில்லை. பின்னர் நிச்சயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இணைவார் என்று கூறப்பட்டது.

ஆனால் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சில் இருந்த அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட்டதன் காரணமாக நாக்பூரில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியை அவர் தவற விட்டுள்ளார். இருப்பினும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவர் நிச்சயம் இணைவார் என்று கூறப்படுகிறது. இப்படி ஷ்ரேயாஸ் ஐயர் முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக அந்த இடத்தை நிரப்ப போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல் அணியுடன் இணைந்துள்ளதால் ரோகித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் துவக்க வீரர்களாக விளையாடுவது உறுதி.

Shubman Gill

அதே வேளையில் ஷ்ரேயாஸ் ஐயர் இடத்தில் விளையாடப்போவது யார் என்பது குறித்து தேடலில் மூன்று வீரர்களுக்கு அதற்கான வாய்ப்பு உள்ளது. அதன்படி 1) சுப்மன் கில் : இந்திய அணியின் துவக்க வீரரான இவர் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதலாவது சதத்தை பதிவு செய்திருந்தார். அதன் பிறகு நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்த சதங்களை விளாசிய அவருக்கு நிச்சயம் மிடில் ஆர்டரில் வாய்ப்பு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

2) சூரியகுமார் யாதவ் : வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் இந்த டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். டி20 ஸ்பெசலிஸ்ட்டாக பார்க்கப்படும் இவர் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக ரஞ்சி கோப்பையில் மிகச்சிறப்பாக விளையாடி உள்ளதால் அவருக்கான வாய்ப்பாகவும் இந்த அறிமுக வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : IND vs AUS : 2 தமிழக வீரர்கள் உட்பட 4 பேர் ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இணைப்பு – வெளியான தகவல்

3) இஷான் கிஷன் : ஏற்கனவே இந்திய அணியின் முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக கே.எஸ் பரத் இருப்பதால் இஷான் கிஷனை மிடில் ஆர்டரில் களமிறக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அட்டகாசமாக விளையாடி வரும் இவருக்கு முதல் முறையாக டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் கிடைத்துள்ளதால் அவரை மிடில் ஆர்டரில் பரிசோதிக்கவும் ஒரு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

Advertisement