ரிஷப் பண்ட், சஹாவை தொடர்ந்து மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – வெளியான ஷாக்கிங் தகவல்

Garani-1
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே இங்கிலாந்தில் இருக்கும் இந்திய வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று குறித்த செய்திகள்தான் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதன்படி நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 3 நபர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தற்போது ஷாக்கிங் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

pant 1

- Advertisement -

அதன்படி அந்த மூவரும் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணி தங்களுக்கு அளிக்கப்பட்ட ஓய்வு நேரத்தில் வெளியே சென்று வந்துள்ளதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. புதிதாக தொற்றுக்கு ஆளான மூவர் யார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், துவக்க வீரருக்கான இடத்திற்கு காத்திருக்கும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் இந்திய அணியின் சப்போர்ட் ஸ்டாப் தயானந்த கராணி ஆகிய மூவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

garani

இதனால் இவர்கள் அனைவரும் தற்போது 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் லண்டனில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க மற்ற வீரர்கள் அனைவரும் துர்காம் நகருக்கு செல்ல இருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Bharath Arun

இன்னும் இரு வாரங்களில் டெஸ்ட் தொடர் ஆரம்பிக்கும் வேளையில் இப்படி தொடர்ச்சியாக இந்திய அணியில் தொற்று உறுதி ஆகி வருவது சற்று அதிர்ச்சி அளிக்கும் விதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement