பாகிஸ்தான் அணியில் மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ். தொடரும் சோகம் – விவரம் இதோ

Pak-1
- Advertisement -

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா பரவத் துவங்கிய முதல் நாளிலிருந்தே விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. சீனா மட்டுமின்றி அமெரிக்கா, இத்தாலி, இந்தியா, பாகிஸ்தான் என அனைத்து நாடுகளிலும் கிட்டத்தட்ட பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அனைத்து வகையான போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது.

Corona-1

- Advertisement -

அது மட்டுமின்றி தற்போது மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களான ஐபிஎல் மற்றும் உலக கோப்பை ஆகியவை நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானிலும் பரவிய இந்த வைரஸ் அந்நாட்டின் முன்னாள் வீரர் ஒருவரை பலிவாங்கியது. அதனைத் தொடர்ந்து அந்த அணியின் முன்னணி வீரரான அப்ரிடிக்கும் சென்ற வாரம் கொரோனா உறுதியானது. அவர் தற்போது சிகிச்சையில் உள்ளார்.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த பாகிஸ்தான் அணியில் மேலும் மூன்று வீரர்களுக்கு கொரோனா தாக்கியுள்ளது உறுதியாகியுள்ளது. இங்கிலாந்து செல்ல இருக்கும் பாகிஸ்தான் அணியை முன்கூட்டியே தயார்செய்து கொரோனா பரிசோதனை செய்த பாகிஸ்தான் அணியின் கிரிக்கெட் வாரியம் இந்த பரிசோதனையின்போது 3 வீரர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஆகியுள்ளதை உறுதி செய்துள்ளது.

Haider-2

அதன்படி பாகிஸ்தான் அணியின் வீரர்களான ஹைதர் அலி, சதாப் கான், ஹரிஸ் ராப் போன்ற மூன்று வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் தற்போது இவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான முதற்கட்ட மருத்துவ உதவிகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் அது மட்டுமின்றி இங்கிலாந்து செல்ல இருக்கும் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு தொடர்ந்து இரு முறை பரிசோதனை நடைபெறும் என்றும் அந்தப் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தால் மட்டுமே அவர்கள் இங்கிலாந்து செல்வார்கள் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

Haider

மேலும் அந்த சுற்றுப்பயணத்திற்கு முன்னர் வரை பாகிஸ்தான் வீரர்களை தனிமைப்படுத்தப்பட்டு கவனிக்க படுவார்கள் என்றும், இங்கிலாந்து கிளம்பும் முன்னரும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement