கைக்கு எட்டி வாய்க்கு எட்டாமல் : டெஸ்ட் கேப்டனாக விராட் கோலி தவறவிட்ட 3 மாபெரும் வரலாற்று சாதனைகள்

Kohli
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக மார்ச் 4இல் மொகாலியில் துவங்ககும் முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி தனது 100வது மைல்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடி சாதனை படைக்க உள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் அதன்பின் எதிரணிகளை தெறிக்கவிடும் பேட்ஸ்மேனாக உருவெடுத்து இந்திய அணியில் முக்கிய வீரராக மாறினார். இன்னும் சொல்ல வேண்டுமானால் சச்சினுக்கு பின் அவரின் இடத்தை நிரப்பும் அளவுக்கு மிகச் சிறப்பாக பேட்டிங் செய்த அவர் இந்தியாவின் ரன் மெஷினாக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

Virat-Kohli

- Advertisement -

அந்த வேளையில் கடந்த 2014ஆம் கேப்டனாக பொறுப்பேற்ற அவர் அந்த சமயத்தில் 7-வது இடத்தில் தடுமாறிக் கொண்டிருந்த இந்தியாவை தனது அதிரடியான ஆக்ரோசம் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்தார். மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன் சொந்த மண்ணில் மட்டும் வெற்றி பெறும் அணியாக இருந்த இந்தியாவை உலகின் எந்த ஒரு இடத்திலும்வெற்றி பெறும் அணியாக மாற்றி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திரம் வாய்ந்த வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார்.

தவறவிட்ட 3 கனிகள்:
மொத்தத்தில் 68 போட்டிகளில் 40 வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து இந்தியா மட்டுமில்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக விடை பெற்றுள்ள விராட் கோலி தற்போது மீண்டும் ஒரு சாதாரண வீரராக விளையாட துவங்கியுள்ளார். கேப்டனாக விலகினாலும் கூட எந்த ஒரு மோசமான தருணத்தில் சிக்கினாலும் அதற்காக எதிரணியிடம் அடிபணியாமல் அதிலிருந்து மீண்டெழுந்து வெற்றி பெறும் குணத்தை இந்திய அணியில் விதைத்த பெருமை அவரையே சேரும். ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் அவர் கேப்டன்ஷிப் விமர்சனங்களை சந்தித்தாலும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு நிகர் யாருமே இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் பல சரித்திரங்களை படைத்துள்ள விராட் கோலி ஒரு சில வெற்றிக் கனிகளை கையில் கிடைத்தும் கோட்டை விட்டதைப் பற்றி பார்ப்போம்.

virat

1. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை : டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு உயிர் கொடுக்கும் வண்ணம் கடந்த 2019ஆம் ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சமயத்தில் உலகின் நம்பர் ஒன் அணியாக பட்டைய கிளப்பிய விராட் கோலி தலைமையிலான இந்தியா அந்த உலகக் கோப்பையில் 2019 – 2021 வரையில் நடந்த லீக் சுற்று போட்டிகளில் சொந்த மண்ணில் ஒரு தோல்வி கூட அடையாமல் வெளிநாடுகளிலும் மற்ற அணிகளை காட்டிலும் அதிக வெற்றிகளைப் பெற்றது.

- Advertisement -

அதன் காரணமாக அந்த உலகக்கோப்பை லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்கொண்டது. இங்கிலாந்தின் சவுதம்டன் நகரில் நடந்த அந்த இறுதிப்போட்டியில் துரதிஷ்டவசமாக மோசமாக செயல்பட்ட இந்திய அணிக்கு மழையும் பாதகமாக அமைந்தது. அதில் வென்ற நியூசிலாந்து உலகின் முதல் டெஸ்ட் சாம்பியனாக சாதனை படைத்தது. லீக் சுற்றுப் போட்டிகளில் சொந்த மண்ணில் அபாரமாக செயல்பட்டு ஆஸ்திரேலியா போன்ற நாட்டில் முதல் முறையாக பல வெற்றிகளை பதிவு செய்து உலகின் நம்பர் ஒன் அணியாக இருந்த இந்தியா அந்தக் உலக கோப்பையை வெல்ல நியூசிலாந்தை விட தகுதியான அணியாக காணப்பட்டது. ஆனால் லீக் சுற்றில் அபாரமாக செயல்பட்டு இறுதிப் போட்டியில் சுமாராக விளையாடிய காரணத்தால் கைக்கு எட்டிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கனி வாய்க்கு எட்டாமல் போனது.

WTC

2. தென்ஆப்பிரிக்காவில் கோட்டை விட்ட வெற்றி: என்னதான் விராட் கோலி தலைமையிலான இந்தியா 2016 முதல் உலகின் நம்பர்-1 அணியாக இருந்தாலும் கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரில் தான் முதல் முறையாக உலகத்தரம் வாய்ந்த அணியாக மாறியது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த அந்த டெஸ்ட் தொடரில் முதல் 2 போட்டிகளில் தோல்வியடைந்து தொடரை இழந்தது இந்தியா ஜோகனஸ்பர்க் நகரில் நடந்த 3வது போட்டியில் மனம் தளராமல் அதிரடியாக செயல்பட்டு கிடைக்காது என நினைத்த வெற்றி சாத்தியப்படுத்தியது. தென்னாப்பிரிக்க மண்ணில் அந்தப் போட்டியில் எழுச்சி கண்ட இந்தியா அதன்பின் ஆஸ்திரேலியாவில் கடந்த 2018/19இல் நடந்த 4 போட்டிகள் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பையை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்றிலேயே முதல் முறையாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் மண்ணைக்கவ்வ செய்த ஆசிய அணியாக சரித்திர சாதனை படைத்தது.

- Advertisement -

அதன் வாயிலாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்த முதல் ஆசிய கேப்டன் என்ற சாதனையை படைத்த விராட் கோலி தலைமையில் அதன் பின் இங்கிலாந்து போன்ற பல நாடுகளில் இந்தியா சரித்திர வெற்றி பெற்றது. அதன் காரணமாக கடந்த டிசம்பரில் தென்னாப்பிரிக்க மண்ணில் நடந்த அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே செஞ்சூரியன் நகரில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா அந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்த முதல் ஆசிய அணி என்ற சாதனை படைத்தது.

INDvsRSA

இதனால் தென்னாப்பிரிக்க மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்று இந்தியா சரித்திரம் படைக்கும் என நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு ஏற்பட்ட நிலையில் 2-வது போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக விலகினார். அதை கச்சிதமாக பயன்படுத்திய அனுபவம் இல்லாத தென் ஆப்பிரிக்கா 2வது போட்டியில் வெற்றி பெற்று 3வது போட்டிக்கு விராட் கோலிக்கு விரும்பிய போதிலும் மீண்டும் இந்தியாவை தோற்கடித்த தொடரை வென்றது. இதன் காரணமாக கைக்கு எட்டிய அந்த வெற்றிக்கனி மீண்டும் வாய்க்கு எட்டாமல் போகவே தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற இந்தியாவின் கனவு மீண்டும் கனவாகவே போனது.

- Advertisement -

3. 41வது சதம்: எத்தனையோ பேட்ஸ்மேன்கள் கேப்டனாக பொறுப்பேற்ற பின் ரன்கள் குவிக்க தடுமாறுவதை பார்த்துள்ளோம். ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அந்தப் பிரச்சனை விராட் கோலிக்கு இருந்ததே கிடையாது. சொல்லப்போனால் கேப்டனாக பொறுப்பேற்ற பின் அவர் முன்பைவிட அதிக ரன்களை குவித்து சதங்களை விளாசினார். அந்த வகையில் கேப்டனாக வெளுத்து வாங்கிய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த கேப்டன் என்ற ரிக்கி பாண்டிங் சாதனையை 41 சதங்களுடன் சமன் செய்தார்.

இதையும் படிங்க : இந்திய அணி வீரர்களின் புதிய சம்பள பட்டியலை வெளியிட்ட பி.சி.சி.ஐ – 3 பேருக்கு மட்டும் தான் அதிக சம்பளம்

ரிக்கி பாண்டிங் 324 போட்டிகளில் அடித்த 41 சதங்களை விராட் கோலி வெறும் 188 போட்டிகளிலேயே அடித்ததால் 42வது அடித்து ரிக்கி பாண்டிங்கை முந்தி தனி ஒருவனாக புதிய உலக சாதனை படைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சமயம் பார்த்து பார்ம் அவுட்டான அவர் கடந்த 2019 அக்டோபருக்கு பின் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்தியாவின் அனைத்து விதமான கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளதால் அந்த உலக சாதனையை அவரால் முழுமையாக தன் வசம் செய்யமுடியவில்லை.

Advertisement