இந்திய அணி வீரர்களின் புதிய சம்பள பட்டியலை வெளியிட்ட பி.சி.சி.ஐ – 3 பேருக்கு மட்டும் தான் அதிக சம்பளம்

ind
- Advertisement -

இலங்கை அணிக்கு எதிராக இந்தியா தனது சொந்த மண்ணில் பங்கேற்கும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் மார்ச் 4 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இந்த தொடரை வெற்றி பெறுவதற்காக முதல் போட்டி நடைபெறும் மொஹாலியில் 2 அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

INDvsSL

- Advertisement -

முன்னதாக இந்த தொடருக்காக கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டனாக அனுபவ வீரர் ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டார். அவருடன் துணை கேப்டனாக நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா செயல்பட உள்ளார். மேலும் கடந்த சில வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் மோசமான பார்மில் திண்டாடி வந்த புஜாரா, ரகானே ஆகியோருடன் மூத்த வீரர்கள் ரித்திமான் சாஹா, இசாந்த் சர்மா ஆகியோரும் இந்த அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்கள்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு:
கடந்த 10 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய வீரர்களாக திகழ்ந்த இவர்கள் சமீப காலங்களாக பெரிய அளவில் சோபிக்க தவறியது இந்தியாவிற்கு பெருத்த பின்னடைவாக இருந்தது. மேலும் 35 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் இவர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து தரமான இந்திய அணியை உருவாக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

pujara 1

குறிப்பாக உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை போன்ற தொடர்களில் சிறப்பாக செயல்பட்டாலும் கூட இனி இவர்வளுக்கு இந்திய அணியில் எப்போதும் வாய்ப்பு இல்லை என இந்திய அணி நிர்வாகம் வெளிப்படையாகவே அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்,சுப்மன் கில், ஹனுமா விஹாரி, கேஎஸ் பரத், அவேஷ் கான் போன்ற பல இளம் வீரர்களுக்கு இந்த இலங்கை தொடர் முதல் நீண்ட காலம் வாய்ப்பு கிடைக்க உள்ளது.

- Advertisement -

சம்பளம் குறைப்பு:
இந்நிலையில் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ள இந்த மூத்த வீரர்களின் சம்பளத்தை குறைக்க பிசிசிஐ அதிரடியான முடிவு எடுத்துள்ளது. பொதுவாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஏ ப்ளஸ், ஏ, பி, சி ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வருடாந்திர சம்பளம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்படுகிறது.

Pujara

இதில் இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் அதிகமாக விளையாடும் வீரர்களுக்கு ஏ ப்ளஸ் பிரிவில் 7 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது. அதேபோல் ஏ, பி, சி ஆகிய பிரிவுகளில் இடம் வகிக்கும் வீரர்களுக்கு முறையே 5 கோடி, 3 கோடி, 1 கோடி என்ற கணக்கில் சம்பளம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள மூத்த வீரர்கள் ரகானே, புஜாரா, இஷாந்த் சர்மா ஆகியோர் ஏற்கனவே இடம் வகித்த ஏ பிரிவிலிருந்து பி பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

மேலும் பி பிரிவில் இடம் வகித்த சஹா சி பிரிவுக்கு மாற்றப்பட உள்ளார். இவருடன் சமீப காலங்களாக இந்திய அணியில் தடுமாறும் மயங் அகர்வால், உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார் ஆகியோரும் பி பிரிவிலிருந்து சி பிரிவுக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

Pandya

பாண்டியாவுக்கு கிடுக்கு பிடி:
அதேபோல் கடைசியாக கடந்த 2021 டி20 உலக கோப்பையில் விளையாடிய நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஏ பிரிவிலிருந்து சி பிரிவுக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். கடந்த வருடம் காயத்தால் விலகிய இவர் உலக கோப்பையில் பந்து வீசுவார் என்ற நம்பிக்கையில் இந்திய அணி நிர்வாகம் இவரை தேர்வு செய்தார்கள். ஆனால் உலக கோப்பையில் சரிவர பந்து வீசாத இவர் பேட்டிங் மட்டும் செய்வேன் என அடம் பிடிக்க துவங்கியுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக பந்துவீசி முழு ஆல்-ரவுண்டராக இந்திய அணிக்கு திரும்பும் வரை இடமில்லை என தேர்வுக் குழுவினர் ஏற்கனவே அறிவித்து இருந்தார்கள். அதன் காரணமாகவே இவர் ஏ பிரிவிலிருந்து சி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இவருடன் தற்போது ஒருநாள் இந்திய அணியில் மட்டும் விளையாட துவங்கியுள்ள மூத்த வீரர் ஷிகர் தவானும் ஏ பிரிவிலிருந்து சி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Rohith-1

அதேசமயம் சமீப காலங்களாக அபாரமாக செயல்பட்டு நிரந்தர இடத்தை பிடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ள முகமது சிராஜ், அக்சர் பட்டேல் ஆகியோர் சி பிரிவிலிருந்து ஏ பிரிவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளார்கள். இவர்களை போல சமீப காலங்களாக அசத்த தொடங்கியுள்ள ஷ்ரேயஸ் ஐயர் முதல் முறையாக கிரேட் பி பிரிவிலும், சூர்யகுமார் யாதவ் முதல் முறையாக இந்த ஒப்பந்தத்தில் சி பிரிவிலும் இடம் பிடித்துள்ளார். இருப்பினும் சமீப காலங்களாக இந்திய அணியில் ஒரு இடத்தை பிடிக்க தடுமாறும் நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ் ஆகியோர் இந்த பட்டியலில் இருந்து மொத்தமாக நீக்கப்பட்டுள்ளார்கள்.

மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, கேஎல் ராகுல், முஹம்மது ஷமி போன்ற நட்சத்திரங்கள் ஏற்கனவே இடம் பிடித்திருந்த கிரேட் ஏ பிரிவில் தொடர்ந்து இடம் பெற்றுள்ளார்கள். மேலும் இந்திய கிரிக்கெட்டுக்காக அதிக சம்பளத்தை கொடுக்கும் கிரேட் ஏ ப்ளஸ் பிரிவில் விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தொடர்ந்து நீடிக்கிறார்கள்.

Advertisement