ஆர்.சி.பி தொடர் தோல்விக்கு முக்கிய காரணம் யார்..! 3 அதிரடி வீரர்களா..! – யார் தெரியுமா..?

- Advertisement -

“இ சாலா கப் நம்தே” அதாவது “இந்த ஆண்டு கோப்பை நமக்கு தான்” என்று பெங்களூரு ரசிகர்களின் ஊக்குவிப்போடு களமிறங்கிய பெங்களூரு அணி ஐ.பி.எல் தொடரில் பரிதபமான நிலையில் விளையாடி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அனுபவமிக்க வீரர்கள் இருந்தும் ஒரு சில வீரர்களின் மோசமான ஆட்டத்தால் இந்த இனி தொடர் தோல்விகளை சந்தித்தது. பெங்களூரு அணியின் தோல்விக்கு டாப் 3 காரணங்களாக உள்ள வீரர்களை பற்றி இந்த பட்டியலில் காணலாம்.

1.கிரிஸ் வோகஸ்:
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணியில் சிறப்பாக விளையாடினார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்து வீரரான இவர் கடந்த 12 மாதங்களாக இங்கிலாந்து ஆடி வந்த அணைத்து டி20 தொடர்களிலும் சிறப்பாக விளையாடிவந்தார். ஆனால் தற்போது பெங்களூரு அணியில் ஆடிவந்த இவர் 5 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை எடுத்தாலும் இவர் ஓவருக்கு கொடுத்துள்ள ரன் விகிதம் 10.36 இருந்ததால் இவருக்கு பதிலாக டிம் சௌதியை மாற்றம் செய்தது பெங்களூரு அணி.

- Advertisement -

2. பிரண்டன் மெக்கல்லம்:
ஐ.பி.எல் வரலாற்றில் முதல் சத்தத்தை அடித்த வீரர், தனது முதல் போட்டியிலே 73 பந்துகளில் 158 ரன்களை குவித்தார். தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் தொடரில் 6 போட்டிகளில் 127 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இவரது பேட்டிங் சராசரியை எடுத்துக் கொண்டால் ஒரு போட்டிக்கு 21 ரன்கள் என்ற வீதம் மட்டுமே வருகிறது. சிறப்பான அட்டாக்காரரான மெக்கல்லம் இந்த ஐ.பி.எல் தொடரில் தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த தற்போது திணறி வருகிறார் என்பது தான் உண்மை.

வாசிங்டன் சுந்தர்:
சில மாதங்களுக்கு முன்னர் நிதிஸ் கோப்பை தொடரில் விளையாடி அதிலிருந்து பெட்ரா ணைபவத்தில் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். கடந்த ஆண்டு புனே அணியில் விளையாடி வந்தார். இந்த ஆண்டு பெங்களூரு அணியில் ஆடி வருகிறார் .இந்த 18 வயது இளம் வீரர் அந்த அணியால் 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். வேக பந்து வீச்சாளரான இவர், இந்த ஆண்டு நடந்து வரும் ஐபில் போட்டிகளில் இவரது வேகம் குறைந்துவிட்டது. 7 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை மட்டுமே பெற்றுள்ள இவர் ஓவருக்கு 9 ரன்கள் என்ற வீதம் வாரி வழங்கியுள்ளார்.

Advertisement