ஐ.பி.எல் தொடரில் விளையாட முகமது ஆமீர் தகுதி பெற்றால் அவரை தட்டி தூக்க காத்திருக்கும் 3 அணிகள் – லிஸ்ட் இதோ

Amir
- Advertisement -

பாகிஸ்தான் அணியின் முன்னனி வேகப் பந்து வீச்சசாளராக இருந்த முஹம்மது அமீர், அந்த அணியின் கிரிக்கெட் நிர்வாகத்துடன் ஏற்பட்ட மனக் கசப்பினால் சென்ற ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை அவ்வளவு எளிதில் முடித்துக் கொள்ள விரும்பாத அவர், ஐபிஎல் தொடர்களில் பங்கு பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையை பெற தற்போது விண்ணப்பித்து இருக்கிறார். மேலும் அவருடைய மனைவியும் பிறப்பால் இங்கிலாந்து நாட்டவர் என்பதால் ஆமீருக்கு அந்நாட்டின் குடியுரிமை பெறுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது.

amir

- Advertisement -

முஹம்மது ஆமீர் இங்கிலாந்து நாட்டின் பிரஜையாக மாறும் பட்டசத்தில், அவரால் நிச்சயமாக ஐபிஎல் தொடர்களில் பங்கேற்க இயலும். ஒருவேளை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் ஏலத்தில் அவரின் பெயர் இடம்பெற்றால், அவரை ஏலத்தில் எடுக்க அனைத்து அணிகளும் போட்டி போடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்த பதிவில் அவரை ஏலத்தில் எடுக்க அதிக போட்டிபோடும் அணிகளாக இருக்கப்போகும் மூன்று அணிகளை தொகுத்து வழங்கியுள்ளோம்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

ஐபிஎல் தொடரில் மிக பெரிய பலம் வாய்ந்த அணியாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தற்போது இருக்கும் வெளிநாட்டு வேகப் பந்து வீச்சாளரான லுங்கி இங்கிடி அந்த அணிக்கு இதுவரை மிகப் பெரிய தலைவலியாகவே இருந்து வருகிறார். மேலும் மற்றொரு வேகப் பந்து வீச்சாளர் ஆல்ரவுண்டரான டுவைன் ப்ராவாவோவும், மோசமான ஃபார்ம் மற்றும் உடல் நிலை காரணமாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறிவருகிறார். இதனை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு முஹம்மது ஆமீரை ஏலத்தல் எடுக்க சென்னை அணி அதிக ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை அணிக்காக இதற்கு முந்தைய சீசன்களில் விளையாடிய இடது கை வேகப் பந்து வீச்சாளர்களான டக்யு போலிஞ்சர் மற்றும் டர்க் நேன்னஸ் ஆகியோர் அந்த அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணியைப் பொறுத்தவரை டுயூப்ளசிஸ், மொயீன் அலி, சாம் கரன் ஆகிய வெளிநாட்டு வீரர்கள் அற்புதமாக செயல்பட்டு வருகின்றனர். எனவே அந்த அணியில் மற்றொரு வெளிநாட்டு வீரர் இடத்திற்கு, இடது கை வேகப் பந்து வீச்சாளரான முஹம்மது ஆமீர் சரியாக பொறுந்திப்போவார்.

- Advertisement -

srh vs pbks

பஞ்சாப் கிங்ஸ்:

ஒவ்வொரு ஐபிஎல் ஏலத்தின் போதும் ஆஸ்திரேலிய அணி வீரர்களை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கும் பஞ்சாப் அணி நிர்வாகம், இந்த ஆண்டும் ரிலே மெரிடித் மற்றும் ஜெய் ரிச்சார்ட்சன் என இரண்டு ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர்களை அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுத்தது. ஆனால் அவர்கள் இருவராலும், பஞ்சாப் அணியின் மற்றொரு வேகப் பந்து வீச்சாளரான முஹம்மது ஷமிக்கு பக்க பலமாக செயல்பட முடியவில்லை. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக பந்து வீசிய இந்த இருவரின் எக்கானமி ரேட்டும் பத்துக்கு மேல் உள்ளது. எனவே அடுத்த ஆண்டு நடைபெறும் ஏலத்திற்கு முன்பாக இந்த இருவரையும் அணியில் இருந்து விடுவித்து விட்டு, முஹம்மது ஆமீரை ஏலத்தில் எடுத்தால் அந்த அணியின் பௌலிங் யூனிட் வலுப்பெறும் என்பதால், பஞ்சாப் அணி ஆமீரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டிபோடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

siraj

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

எந்த வருட ஐபிஎல் தொடரிலும் இல்லாத வகையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதி அற்புதாமாக விளையாடி இருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி. அந்த அணியின் இந்த சிறப்பான செயல்பாட்டுக்கு மேக்ஸ்வெல், டி வில்லியர்ஸ் ஆகியோரின் சிறப்பான பேட்டிங் ஃபர்மான்சையும் தாண்டி, இந்திய வேகப் பந்து வீச்சாளர்களான முஹம்மது சிராஜ் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சும் ஒரு மிக முக்கிய காரணமாகும். இப்படி அந்த அணியில் இருக்கும் இந்திய பௌலர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், மற்றொரு வேகப் பந்து வீச்சாளராக இருக்கும் நியூசிலாந்தின் கைல் ஜேமிசன் அந்த அணிக்காக இதுவரை எந்த ஒரு சிறப்பான பங்களிப்பையும் வழங்கவில்லை. அதிக தொகை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்ட இவருக்கு, அந்த அணியின் கேப்டன் விராட் கோஹ்லி அனைத்து போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கி விட்டார். ஆனால் எந்த போட்டியிலும் கைல் ஜாமிசனால் அணிக்கு தேவையானதை செய்ய முடியவில்லை. எனவே அடுத்த ஆண்டு முஹம்மது ஆமீரை ஏலத்தில் எடுத்து கைல் ஜேமிசன் இடத்தை நிரப்பிக்கொள்ள பெங்களூர் அணி விரும்பும் என்பதால், அந்த அணியும் அவரை ஏலத்தில் எடுக்க கடுமையாக போட்டிபோடும்.

Advertisement