காயம் காரணமாக 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரினை தவறவிட்ட 3 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Shami-and-Prasidh
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பினை பெற்று வருகிறது. இதுவரை 16 சீசன்கள் வெற்றிகரமாக நிறைவு அடைந்துள்ள வேளையில் அதனை தொடர்ந்து 2024-ஆம் ஆண்டிற்கான 17 வது சீசனானது மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணி வீரர்களும் தற்போது தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில் ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக விளையாட முடியாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு முன்னணி வீரர்கள் காயம் காரணமாக வெளியேறியுள்ள வேளையில் மூன்று இந்திய வீரர்களால் இந்த ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்று கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

முகமது ஷமி : இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பையின் போது அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் கணுக்காலில் அடைந்த காயம் காரணமாக தற்போது அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் அவர் மீண்டும் கிரிக்கெட் விளையாட திரும்ப சில மாதங்கள் ஆகும் என்பதனால் ஐபிஎல் தொடரை தவற விட்டுள்ளார்.

- Advertisement -

பிரசித் கிருஷ்ணா : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வந்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரசித் கிருஷ்ணா கையில் ஏற்பட்டுள்ள காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளதால் அவரும் அந்த காயத்திலிருந்து குணமடைய சில மாதங்கள் ஆகும் என்பதனால் அவரும் இந்த ஐபிஎல் தொடரை தவற விட்டுள்ளார்.

இதையும் படிங்க : 100 ரூபாய்க்கே வழியில்ல.. கிரிக்கெட்டை விட்ரலாம்ன்னு நெனச்சேன்.. அதை செஞ்சா கண்டிப்பா சாதிக்க முடியும்.. சிராஜ் பேட்டி

சூரியகுமார் யாதவ் : தென்னாப்பிரிக்க டி20 தொடரின் போது இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்ட அவர் காலில் ஏற்பட்ட காயம்காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட வேளையில் தற்போது ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் ஐபிஎல் தொடரின் முதல் இரண்டு போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஐபிஎல் தொடரின் போது மேலும் அவர் வலியை அனுபவித்தால் அந்த தொடரில் இருந்து விலக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement