நல்ல பார்மில் இருந்தும் நியூஸிலாந்து டி20 தொடரில் செலக்ட் ஆகாத 3 தரமான வீரர்கள் – பட்டியல் இதோ

Ravi Bishnoi
- Advertisement -

உலக டி20 கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இந்தத் தொடரில் விராட் கோலி உட்பட ஒரு சிலரை தவிர்த்து ரோகித் சர்மா போன்ற பெரும்பாலான சீனியர்கள் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக அடுத்ததாக 2024ஆம் ஆண்டு நடைபெறும் அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்க வேண்டுமென்ற ரசிகர்களின் எண்ணம் இந்திய வாரியத்திடமும் காணப்படுகிறது.

Pandya-and-Williamson

- Advertisement -

அதனாலயே அடுத்ததாக நடைபெறும் நியூசிலாந்து டி20 தொடரில் வருங்கால கேப்டனாக கருதப்படும் ஹர்திக் பாண்டியா தலைமையில் பெரும்பாலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உம்ரான் மாலிக் போன்ற சமீப காலங்களில் தடுமாற்றமான செயல்பாட்டை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கு கூட மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில வீரர்கள் தற்சமயத்தில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நல்ல பார்மில் இருந்தும் துரதிஷ்ர்டவசமாக வாய்ப்பு பெறவில்லை. அவர்களைப் பற்றி பார்ப்போம்:

3. தீபக் சஹர்: ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அசத்தியதால் கடந்த 2018இல் அறிமுகமாகி 2019ஆம் ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய பவுலராக சாதனை படைத்த இவர் 2022 ஐபிஎல் தொடருக்கு முன்பாக துரதிஷ்டவசமாக காயமடைந்தார். அதனால் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட இவர் அதிலிருந்து குணமடைந்து சமீபத்திய தென்னாபிரிக்க டி20 தொடரில் அசத்தியதால் காயமடைந்த பும்ராவுக்கு பதில் தேர்வாக தயாரானார்.

Deepak Chahar IND

ஆனால் கடைசி நேரத்தில் மீண்டும் துரதிஷ்டவசமாக காயத்தை சந்தித்ததால் வெளியேறிய அவர் தற்போது குணமடைந்து விஜய் ஹசாரே உள்ளூர் தொடரில் விளையாடி வருகிறார். அந்த வகையில் நியூசிலாந்து தொடரில் முதன்மை பவுலராக தேர்வாகியுள்ள புவனேஸ்வர் குமாரை விட நல்ல பார்மில் இருந்தும் பேட்டிங்கில் கணிசமான ரன்களை அதிரடியாக குவிக்கும் திறமை பெற்றும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

2. ரவி பிஷ்னோய்: 2020 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த பவுலராக சாதனை படைத்து ஐபிஎல் தொடரிலும் அசத்தலாக செயல்பட்டதால் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகமான இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் டி20 தொடரில் கூட அசத்தலாக செயல்பட்டார். அதனால் டி20 உலக கோப்பை அணியில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்த இவருக்கு நியூசிலாந்து தொடரில் வாய்ப்பு கிடைக்காதது ஆச்சரியமாகும்.

bishnoi

அப்படி நல்ல பார்மில் இளமையும் திறமையும் பெற்றுள்ள போதிலும் இந்த நியூசிலாந்து தொடரில் யுஸ்வென்ற சஹால் – குல்தீப் யாதவ் ஆகிய 2 சீனியர் சுழல் பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளதால் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நம்பப்படுகிறது. ஆனாலும் 2024 டி20 உலக கோப்பை இளம் இந்திய அணியில் இவர் முதன்மை ஸ்பின்னராக இருக்க வாய்ப்புள்ளது.

1. ப்ரித்வி ஷா: நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதுமே இவரது பெயர் ஏன் அதில் இடம் பெறவில்லை என்பதே பெரும்பாலான இந்திய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கேள்வியாக இருந்தது. ஏனெனில் 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் போல அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தொடக்க வீரராக தன்னை அடையாளப்படுத்தினார்.

shaw 1

ஆனால் தொடர்ச்சியாக சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்த தவறியதால் இந்திய அணியில் இடத்தை இழந்த அவர் சமீபத்திய சயீத் முஷ்டாக் அலி டி20 கோப்பையில் அதிரடியான சதமடித்து நல்ல பார்மில் இருப்பதுடன் உடல் எடையையும் குறைத்துள்ளார். அதுபோக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் டி20 கிரிக்கெட்டில் மிரட்டும் திறமை பெற்றுள்ள இவர் உலகக்கோப்பையில் தடவிய ராகுல் போன்றவருக்கு பதிலாக ஓப்பனிங்கில் அதிரடியாக ரன்களை குவிக்கும் தன்மை கொண்டவர். இருப்பினும் துரதிஷ்டவசமாக இந்த தொடரில் வாய்ப்பு பெறாத இவர் நிச்சயமாக உழைத்து 2024 டி20 உலக கோப்பையில் இடம் பிடிப்பார் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement