- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சர்வதேச டி20 கிரிக்கெட்டின் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் – 3 இந்திய வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஆசிய கோப்பை தொடரானது நடைபெற்று வரும் வேளையில் சர்வதேச டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் வெளியான பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியை சேர்ந்த மூன்று வீரர்கள் டாப் 10 பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

டாப் 10-ல் இடம்பிடித்துள்ள 3 இந்திய வீரர்கள் :

இப்படி டாப் 10-ல் 3 இந்திய பேட்ஸ்மேன்கள் இடம்பிடித்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ஆசிய கோப்பை தொடரில் அசத்தலாக செயல்பட்டு வரும் இந்திய அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா 884 புள்ளிகளுடன் தனது முதல் இடத்தை மீண்டும் தக்க வைத்துள்ளார்.

- Advertisement -

அவருக்கு அடுத்து சமீபத்தில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது 60 பந்துகளில் 144 ரன்கள் குவித்த பிலிப் சால்ட் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மேலும் அதே போட்டியில் 80 ரன்களை குவித்த ஜாஸ் பட்லர் மூன்றாம் இடத்தினை பிடித்துள்ளார்.

நான்காவது இடத்தினை பொருத்தவரை இந்திய அணியின் இளம் வீரரான திலக் வர்மா பிடித்துள்ளார். ஐந்தாவது இடத்தில் டிராவிஸ் ஹெட்டும், ஆறாவது இடத்தில் இலங்கை அணியின் துவக்க வீரர் பதும் நிசாங்காவும் இருக்கும் வேளையில் ஏழாவது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 747 புள்ளிகளுடன் அந்த இடத்தை கைப்பற்றியுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் இந்திய அணியை சேர்ந்த 3 வீரர்கள் டாப் 10-ல் இடம் பிடித்துள்ளனர். பந்துவீச்சு துறையை பொறுத்தவரை தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி முதலிடத்தை பிடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதல் இடத்தினை பிடித்துள்ளது.

இதையும் படிங்க : தோனி ஆல் டைம் கிரேட் கேப்டன்.. அவர் கூட விளையாட முடியலனாலும் அதை ரசித்தேன்.. பொல்லார்ட் பேட்டி

ஆல்ரவுண்டர்களுக்கான பட்டியலில் ஹார்டிக் பாண்டியா முதலிடத்தை பிடித்துள்ளார். இப்படி டி20 போட்டிகளில் சிறந்த பேட்மேன், சிறந்த பவுலர், சிறந்த ஆல்ரவுண்டர், சிறந்த அணி என அனைத்து பட்டியலிலும் இந்திய அணி முதல் இடத்தினை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -