டெஸ்ட் மேட்ச் கேன்சலான கடுப்பில் ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகிய – 3 இங்கிலாந்து வீரர்கள்

Eng-ipl
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த 5வது டெஸ்ட் போட்டியானது இந்திய அணியின் பயிற்சியாளர்கள் இடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக போட்டி நடத்தப்படாமல் ரத்து செய்யப்பட்டது. முதலில் முதல் இரண்டு நாள் ஆட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்த நிலையில் பின்னர் முழுமையாக போட்டி ரத்தாகிறது என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த டெஸ்ட் போட்டி நடைபெறாத விரக்தியில் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டோம் என மூன்று இங்கிலாந்து வீரர்கள் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ind vs eng

- Advertisement -

ஏற்கனவே இந்தியாவில் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் தொடரானது வீரர்களிடையே பரவிய கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இந்த தொடரானது இரண்டாம் பாதி தற்போது செப்டம்பர் 19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்த எஞ்சியுள்ள தொடரில் இருந்து மூன்று இங்கிலாந்து வீரர்களின் வெளியேற்றம் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. அதன்படி சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடும் பேர்ஸ்டோ, பஞ்சாப் அணிக்காக விளையாடும் டேவிட் மலான் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் க்றிஸ் வோக்ஸ் ஆகிய மூவரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

eng ipl

ஆனால் இது தான் காரணம் என்ற உறுதியான தகவல் கிடைக்கவில்லை என்றாலும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் தான் அவர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பஞ்சாப் அணி டேவிட் மலானுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மார்க்ரம்-மை மாற்று வீரராக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களை தவிர்த்து மற்ற அனைத்து இங்கிலாந்து வீரர்களும் இந்த தொடரில் விளையாடுவார்கள் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement