கொல்கத்தா அணியை தொடர்ந்து சி.எஸ்.கே அணியில் 3 பேருக்கு கொரோனா உறுதி – சிக்கலில் ஐ.பி.எல் தொடர்

Balaji-3

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் தற்போது இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தொடரின் முதற்கட்ட போட்டிகள் முடிந்து தற்போது அடுத்த கட்டப் போட்டிகள் நடைபெற்று வரும் இவ்வேளையில் இன்று காலையில் இருந்து வரும் தகவல்கள் ஐபிஎல் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சிகரமான தகவல்களாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏனெனில் பயோ பபுள் வளையத்தையும் மீறி கொரோனா தனது வேலையை காட்டி வருகிறது.

CSK

அந்த வகையில் இன்று நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டி பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற இருந்தது. ஆனால் இந்த போட்டி தற்போது ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏனெனில் கொல்கத்தா அணியை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த போட்டி ஒத்திவைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியது.

அதனை தொடர்ந்து தற்போது மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக சிஎஸ்கே அணியில் நிர்வாகிகள் மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தமுறை வீரர்களுக்கு கொரோனா உறுதிசெய்யப்படவில்லை. சி.எஸ்.கே அணியின் நிர்வாகத்தைச் சேர்ந்த தலைமைச் செயல் அதிகாரியான காசி விசுவநாதன், பந்துவீச்சு பயிற்சியாளரான பாலாஜி ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

kasi

அதுமட்டுமின்றி வீரர்கள் செல்லும் பேருந்தை பராமரிக்கும் ஒருவருக்கும் ஒருவர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மூவருமே வீரர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்கள் என்பதால் அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

- Advertisement -

Balaji

மேலும் இவர்கள் மூலமாக வீரர்களுக்கு தொற்று பரவி இருக்குமோ என்ற கோணத்தில் வீரர்களுக்கும் பரிசோதனை நடைபெற இருக்கிறது. இன்று காலை முதல் ஒவ்வொரு அணிகளாக தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில் இன்னும் சில அணிகளுக்கும், இன்னும் சில வீரர்களுக்கும் தொற்று பரவினால் இந்த தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.