
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு ஆட்டங்களின் முடிவில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டியானது இன்று நடைபெற உள்ளது. அதன்படி டிசம்பர் 19-ஆம் தேதியான இன்று அஹமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்த கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டியானது சற்றுமுன் துவங்கியது.
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணி முதலில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த ஐந்தாவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் 3 முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக டாசின் போது கேப்டன் சூர்யகுமார் அறிவித்தார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
நாங்கள் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்யவே விரும்புகிறோம். ஏனெனில் இந்த மைதானம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். மேலும் இந்த போட்டி முடிவை தீர்மானிக்கும் போட்டியாக இருந்தாலும் மகிழ்ச்சியுடன் விளையாட ஆசைப்படுகிறோம்.
இந்த போட்டியில் பும்ரா ஹர்ஷித் ராணாவிற்கு பதிலாகவும், வாஷிங்டன் சுந்தர் குல்தீப் யாதவுக்கு பதிலாகவும், சஞ்சு சாம்சன் சுப்மன் கில்லுக்கு பதிலாகவும் அணிக்குள் வந்துள்ளதாக சூரியகுமார் யாதவ் அறிவித்துள்ளார். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடருக்கு முன்னதாக சூரியகுமார் யாதவ் இதை செய்தே ஆகனும் – வருண் ஆரோன் கருத்து
1) அபிஷேக் சர்மா, 2) சஞ்சு சாம்சன், 3) திலக் வர்மா, 4) சூரியகுமார் யாதவ், 5) ஹார்டிக் பாண்டியா, 6) ஷிவம் துபே, 7) ஜிதேஷ் சர்மா, 8) வாஷிங்டன் சுந்தர், 9) அர்ஷ்தீப் சிங், 10) வருண் சக்கரவர்த்தி, 11) ஜஸ்ப்ரீத் பும்ரா