சூப்பர் ஓவரில் மெய்டன் வீசும் அசாத்திய திறமையுள்ள 3 பந்துவீச்சாளர்கள். உங்களது சாய்ஸ் என்ன – லிஸ்ட் இதோ

Bumrah

டி20 போட்டிகள் வந்தபின்னர் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு கிரிக்கெட் போட்டியும் சென்றுகொண்டிருக்கிறது. ஒரு சில போட்டிகள் எல்லாம் இறுதியில் டை ஆகி சூப்பர் ஓவர் விளையாடப்படுகிறது. சூப்பர் ஓவர் விளையாட்டு போட்டிகள் சர்ச்சைக்குள்ளாகி முடிந்திருக்கிறது. அதில் பந்துவீச்சாளர்கள் பட்டையைக் கிளப்பியுள்ளனர். தற்போது சூப்பர் ஓவரில் மெய்டன் ஓவர்கள் வீசும் திறமையுள்ள 3 பந்துவீச்சாளர்களை பற்றி தற்போது பார்ப்போம்.

narine

சுனில் நரைன் :

மாயாஜால சுழற்பந்து வீச்சாளர் என்று அழைக்கப்படும் இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி பல சூப்பர் ஓவர்கள் வீசி இருக்கிறார். இவரது எக்கானமி 5.4 மட்டுமே இவரால் ஒரு ஓவரில் 6 பந்துகளையும் ஆறு விதமாக வீச முடியும். இதன் காரணமாகவே சூப்பர் ஓவர் அவர் ஜாம்பவானாக திகழ்கிறார். ஒரு சிறந்த டாப் ஸ்பின்னர், ஒரு தூஸ்ரா, ஒரு ஆஃப்-ஸ்பின்னர், ஒரு கேரம் பந்து என அனைத்தையும் வீசுவார்.

Rashid

ரஷித் கான் :

- Advertisement -

தற்போது உலகில் இருக்கும் மிகச் சிறந்த லெக் ஸ்பின்னர் இவர்தான். டி20 போட்டிகளில் தன்னை தயார்படுத்தி இருக்கிறார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரிலும் பட்டையை கிளப்பி வருகிறார். கிட்டத்தட்ட 150 டி20 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இவரும் சுனில் நரைன் போலவே கடைசி மூன்று ஓவர்களை அற்புதமாக வீசக் கூடிய வல்லமை பெற்ற இவராலும் சூப்பர் ஓவரை மெய்டன் ஓவராக மாற்ற முடியும்.

bumrah 2

ஜஸ்பிரித் பும்ரா :

இந்த பட்டியலில் ஒரு இந்திய வேகப்பந்துவீச்சாளர் இருப்பது இந்தியாவின் இத்தனை ஆண்டுகால வேகப்பந்து வீச்சாளர் முயற்சிக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். முதன்முதலாக தனது 23 வயதில் குஜராத் அணிக்கு எதிராக ஒரு சூப்பர் ஓவர் வீசினார் பும்ரா. தற்போது இவருக்கு 26 வயதாகி விட்டது. தனது திறமையையும் மெருகேற்றி விட்டார் . இப்போது எந்த ஒரு உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனையும் வைத்து இவரால் மெய்டன் ஓவர் வீச முடியும்.