மீண்டும் மிரட்டும் மெஹதி ஹசன் – கடைசி நேரத்தில் எளிய வெற்றிக்கு திணறும் இந்தியா, பரபரப்பில் வெல்லப்போவது யார்?

IND vs Ban Mehidy
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் 188 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் டிசம்பர் 22ஆம் தேதியன்று டாக்கா கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சாண்டோ 24, ஜாகிர் ஹசன் 15, கேப்டன் சாகிப் 16, லிட்டன் தாஸ் 16, ரஹீம் 16, மெஹதி ஹசன் 15 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுத்தார்.

இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட் சாய்த்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு சுப்மன் கில் 20, கேஎல் ராகுல் 10, புஜாரா 24, விராட் கோலி 24 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 94/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியாவை அதிரடியாக பேட்டிங் செய்து 5வது விக்கெட்டுக்கு 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றிய ரிசப் பண்ட் சதத்தை நழுவ விட்டாலும் 93 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

திணறும் இந்தியா:
அவருடன் பொறுப்பாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர் தனது பங்கிற்கு 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில் இதர வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் இந்தியா 314 ரன்களுக்கு அவுட்டானது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜுல் இஸ்லாம் மற்றும் சாகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 87 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை துவங்கிய வங்கதேசம் மீண்டும் இந்திய பவுலர்களின் தரமான செயல்பாட்டில் 231 ரன்களுக்கு அவுட்டானது.

சாண்டோ 5, மோனிமுல் ஹைக் 5, சாகிப் 13, ரஹீம் 9, மெஹதி ஹசன் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 73 ரன்களும் ஜாகிர் ஹாசன் 51 ரன்களும் நுருள் ஹசன் மற்றும் டஸ்கின் அகமது ஆகியோர் தலா 31 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் அதிகபட்சமாக அக்சர் பட்டேல் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து 146 ரன்கள் என்ற எளிய இலக்கை 3வது நாளின் 3 மணிக்கு சேசிங் செய்ய துவங்கிய இந்தியா ஒரு மணி நேரத்தில் அதிரடியாக விளையாடி இன்றே போட்டியை முடித்து விடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் தடவல் நாயகன்களை கொண்டுள்ள இந்தியாவுக்கு கேப்டன் ராகுல் வழக்கம் போல 2 ரன்னில் நடையை கட்டிய நிலையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் தனி ஒருவனாக வரலாற்றுத் தோல்வியை பரிசளித்த மெஹதி கடைசி நேரத்தில் பந்து வீச்சில் மாயாஜாலம் செய்தார். ஏனெனில் அவரது அற்புதமான சுழலில் சுப்மன் கில் 7, புஜாரா 6, விராட் கோலி 1 என 3 முக்கிய பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் திடீரென்று சரிவை சந்தித்த இந்தியா 3வது நாள் முடிவில் 45/4 என திண்டாடி வருகிறது. களத்தில் அக்சர் படேல் 26*, ஜெயதேவ் உனட்கட் 3* ரன்களுடன் உள்ளனர்.

அப்படி 3வது நாளில் எளிதாக முடிக்க வேண்டிய போட்டியை 4வது நாள் வரை இழுத்துக் கொண்டு வரும் இந்தியாவுக்கு இன்னும் 100 ரன்கள் தேவைப்படுகிறது. வங்கதேசத்துக்கு இன்னும் 6 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. அதனால் கடைசி நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ள இப்போட்டியில் மெகதி ஹசன் என்ன மேஜிக் வேண்டுமானாலும் செய்து திடீரென்று இந்தியாவை தோற்கடிக்கும் நிலையும் ஏற்படலாம்.

இதையும் படிங்க: வீடியோ : நேரலையில் முன்னாள் இலங்கை வீரருக்கு நிகழ்ந்த சம்பவம் – வயிறு குலுங்க சிரித்த இதர வர்ணனையாளர்கள், நடந்தது என்ன

இருப்பினும் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், அஷ்வின் 3 ரன்களை குவிக்கும் முக்கிய வீரர்கள் இன்னும் இருப்பதால் நாளை இந்தியா போராடி வெல்லுமா என்று இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதை விட 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவலில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இப்போட்டியில் வென்று 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் நிச்சயம் இந்திய வீரர்கள் முழுமூச்சை கொடுத்து போராடுவார்கள் என்று நம்பலாம்.

Advertisement