இந்த உலகக் கோப்பை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.. அவர் தான் எல்லா பிளானும் போட்டாரு.. குல்தீப் யாதவ்

Kuldeep Yadav
- Advertisement -

ஐசிசி 2024 உலகக் கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வென்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்தது. கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற அந்த தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் எதிரணிகளை சொல்லி அடித்த இந்தியா தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக 8 வெற்றிகள் பெற்றது. குறிப்பாக இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வென்றது.

அந்த வெற்றிக்கு ஜஸ்ப்ரித் பும்ரா முக்கிய பங்காற்றி தொடர்நாயகன் விருதை வென்றார். அதே போல எதிரணிகளை அடித்து நொறுக்க வேண்டும் என்ற அணுகுமுறையை உண்டாக்கிய கேப்டன் ரோஹித், ஃபைனலில் அசத்திய விராட் கோலி, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அனைவருமே வெற்றியில் பங்காற்றினர். இறுதியில் அந்தக் கோப்பையை பயிற்சியாளராக விடைபெறும் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்காக சமர்ப்பிப்பதாக கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.

- Advertisement -

குல்தீப் பாராட்டு:
அந்த வெற்றியுடன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இந்நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்காக இந்த உலகக் கோப்பையை தாம் சமர்ப்பிப்பதாக சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார். ஏனெனில் ரோகித் சர்மா இந்த தொடருக்காக முழுமையாக திட்டமிட்டு அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை கொண்டு வந்ததாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த உலகக் கோப்பை அற்புதமாக திட்டமிட்டு அணியை விரும்பி வழி நடத்திய ரோஹித் சர்மாவுக்கானது. மீட்டிங்கில் அவர் அதிரடியாக விளையாடும் எண்ணம் மற்றும் அணுகுமுறை பற்றி பேசுவார். தொடர் நடைபெறும் போது அதை தன்னுடைய பேட்டிங்கில் செயல்படுத்திய அவர் அணியை முன்னின்று வழி நடத்தினர்”

- Advertisement -

“இந்த உலகக் கோப்பை அவரைச் சேரும். இந்த வெற்றியை விட எங்களுக்கு வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது. ஃபைனலில் விராட் பாய் 70 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றார். எனவே தன்னுடைய டி20 கேரியரை நினைத்து அவர் மகிழ்ச்சியடைவார் என்று நினைக்கிறேன். அதே போல தான் ரோகித் பாய். கடந்த வருடங்களில் நல்ல கிரிக்கெட்டை விளையாடிய ஜடேஜாவும் மகிழ்ச்சியடைவார்”

இதையும் படிங்க: ரோம் ஒரே நாளில் உருவாக்கப்படல.. 2 வருட உழைப்பு வீடியோவாக பதிவிட்டு.. அபிஷேக்கை வாழ்த்திய யுவராஜ் சிங்

“இந்த வெற்றிக்கு பின் திறந்தவெளி பேருந்தில் சென்று ரசிகர்களுடன் கொண்டாடியதை நான் மறக்கவே மாட்டேன். அது போன்ற அனுபவத்தை நான் பெற்றதில்லை. 2007இல் வென்ற போது ரோகித் பாய் அந்த அனுபவத்தை சந்தித்திருப்பார். ஆனால் எனக்கு மும்பையில் நடந்தது நம்ப முடியாத நினைவாகும்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து ரோஹித் சர்மா 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் இந்தியாவின் கேப்டனாக செயல்பட உள்ளார்.

Advertisement