2018 ஐபிஎல் போட்டி, ஐந்து ஆல்ரவுண்டர்களில் யார் கை ஓங்கி நிற்கும் !

jadeja
- Advertisement -

ஏப்ரல் 7ம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள ஐபிஎல் போட்டிகளில் உலகம் முழுக்க இருந்து சிறந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்திய ஐபிஎல் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்த உலகின் அனைத்து நாட்டு வீரர்களும் இப்பொழுதே தயாராகி வருகின்றனர்.இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியானது உலகின் தலைசிறந்த டி20 போட்டிகளில் ஒன்றாகும்.

chennai

- Advertisement -

இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், பங்கேற்ற அனைத்து அணிகளும் ஆல்ரவுண்டர்களுக்கு முக்கியத்துவம் தந்தது. அதுமட்டுமில்லாமல் ஆல்ரவுண்டர்களை தங்கள் அணிக்கு வளைத்து போட அதிக விலைகொடுத்தும் வாங்கியது.அந்தவகையில் இந்தாண்டு ஐபிஎல்-யில் முக்கியத்துவம் அளித்து எடுக்கப்பட்ட ஐந்து சிறந்த ஆல்ரவுண்டர்களை பற்றி இந்த கட்டுரையில் பார்ப்போம்.

1. ஷேன் வாட்சன் (சென்னை சூப்பர் கிங்ஸ்)

இந்தாண்டு சென்னை அணிக்காக களமிறங்கவுள்ள வாட்சன் சென்ற வருடம் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.ஆஸ்திரேலியாவைசேர்ந்த மிகச்சிறந்த பந்துவீச்சாளரும் பேட்ஸ்மனான இவரை இந்த வருடம் சென்னை அணி 4கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

- Advertisement -

watson

சென்னை அணிக்காக தோனி தலைமையில் விளையாடவுள்ள வாட்சன் தற்போது பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் லீக்கில் கலக்கி வருகின்றார்.
அதைவிட சிறப்பாக ஏப்ரலில் தொடங்கவுள்ள ஐபிஎல்-யில் அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2. சாகிப்-ஹல்-ஹசேன் (ஹைதராபாத் சன்ரைசர்ஸ்)

- Advertisement -

சென்ற வருடம் கொல்கத்தா அணிக்காக விளையாடிய சாகிப்-ஹல்-ஹசேன் இந்த ஆண்டு ஹைதராபாத் அணிக்காக சுமார் 2கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணியை சேர்ந்த இவர் தற்போது கைவிரலில் ஏற்பட்டுள்ள காயத்தினால் சிகிச்சையிலிருக்கும் விரைவில் குணமாகி ஐபிஎல்-யில் களமிறங்கி ஆல்ரவுண்டராக கலக்குவார்.

shakib

3. ஹர்திக்பாண்டியா (மும்பை இந்தியன்ஸ்)

- Advertisement -

இந்திய அணியை சேர்ந்த இளம்வீரரான ஹர்திக்பாண்டியா சென்ற ஆண்டுகளிலும் மும்பை அணிக்காக விளையாடினார்.இந்த ஆண்டும் மும்பை அணி இவரை தக்க வைத்துள்ளது.மிகச்சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வரும் ஹர்திக்பாண்டியா பேட்டிங்கிலும் சரி பவுலிங்கிலும் சரி எந்தவொரு சூழலிலும் நிலைமையை கணித்து அதற்கேற்றாற்போல் கையாளுபவர்.

பேட்டிங் வரிசையில் எந்த வரிசையில் தன்னை இறக்கிவிட்டாலும் அதிரடி காட்ட வேண்டுமென்று முடிவெடுத்து விட்டால் எதிரணியினரின் பந்துவீச்சை வெளுத்து வாங்குவார்.இளம்வீரரான இவர் அணிக்கு வந்த சிலமாதங்களிலேயே தன்னுடைய அபார திறமையால் அனைவராலும் ரசிக்கப்பட்டவர்.மும்பை இந்தியன்ஸ் அணியின் சீனியர் பிளேயரான இவர் இந்த ஐபிஎல் போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

hardik

4. பிராவோ (சென்னை சூப்பர் கிங்ஸ்)

சென்னை அணிக்காக விளையாடி வந்தவர் சென்னை அணியை ஐபிஎல்-யில் தடைசெய்த பின்னர் குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடினார். சென்ற வருடம் இவருக்கு ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல்-யில் கலந்துகொள்ளவில்லை.

வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த பிராவோ சிறந்த பந்துவீச்சாளரும் பேட்ஸ்மேனும் ஆவார். சென்னை அணியின் வெற்றிக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் இவர் இந்த வருடமும் அதேபோல ஜொலிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

dwayne

5. பென் ஸ்டோக்ஸ். (ராஜஸ்தான் ராயல்ஸ்)

இங்கிலாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டரான இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் இந்தாண்டு 12.5 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.சென்ற வருட ஐபிஎல்-யில் சிறந்த வீரருக்கான விருதை தட்டிச்சென்றவர் இவர்.இந்தாண்டும் ஐபிஎல்-யில் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார் என்று வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளார்.

ben

Advertisement