இந்தியா – இலங்கை தொடர் ரத்தாகும் அபாயம். பலத்த பாதுகாப்பையும் மீறி – 2 பேருக்கு கொரோனா உறுதி

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரானது வரும் 13ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணியும், தசன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. இந்திய அணியின் முதன்மை வீரர்கள் இங்கிலாந்து தொடருக்கு சென்றுள்ளதால் தற்போது இளம் வீரர்களை கொண்ட புதிய அணி இலங்கை அணியை எதிர்கொண்டு எவ்வாறு விளையாடப் போகிறது என்பதை காண அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

indvssl

- Advertisement -

இருப்பினும் இந்த இந்திய அணியால் நிச்சயம் இலங்கை அணியை எளிதில் வீழ்த்த முடியும் என்றும் தெரிகிறது. இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில் திட்டமிட்டபடி இந்த தொடர் நடைபெறுமா ? என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அன்மையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணி 6 ஆம் தேதி தான் நாடு திரும்பி உள்ளது.

ஏற்கனவே இங்கிலாந்து அணியில் 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பியுள்ள அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக வீரர்கள் யாரும் அறையை விட்டு வெளியே வரக்கூடாது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் கட்டளையிட்டுள்ளது.

sl

மேலும் தற்போது வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள உள்ளனர். முதற்கட்ட பரிசோதனை மட்டுமே முடிந்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனையில் மேலும் சில வீரர்களுக்கு கொரோனா உறுதியாகும் பட்சத்தில் இந்த தொடர் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட கூட வாய்ப்பு உள்ளது. ஆனால் இதுவரை வீரர்கள் யாருக்கும் கொரோனா உறுதியாகவில்லை என்றும் ஊழியர்களுக்கு மட்டுமே கொரோனா உறுதியாகியுள்ளது என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

SL

அதுமட்டுமின்றி 12ஆம் தேதி வரை அவர்கள் பயிற்சி எதிலும் கலந்து கொள்ள மாட்டார்கள் அதுவரை தனிமைப்படுத்தப்பட்டு இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளதால் நிச்சயம் 13-ஆம் தேதி இந்த தொடர் திட்டமிட்டபடி துவங்கும் என்றே தெரிகிறது. அப்படி அனைத்தையும் மீறி வீரர்களுக்கும் கொரோனா உறுதியாகும் பட்சத்தில் நிச்சயம் இந்த தொடர் ரத்தாக அதிக வாய்ப்பு உள்ளது.

Advertisement