IND vs ENG : ரோஹித் சர்மாவிற்கு பதிலாக துவக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ள 2 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Rohith
- Advertisement -

இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா ஐபிஎல் தொடருக்கு பின்னர் ஓய்வு எடுத்துக்கொண்டு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் மீண்டும் கேப்டனாக செயல்பட இருந்தார். அதன்படி இங்கிலாந்து சென்றடைந்த பின்னர் பயிற்சி போட்டியில் விளையாடிய ரோகித்திற்கு நேற்று நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதன் காரணமாக தற்போது அவர் அணி வீரர்களின் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் ஜூலை 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னர் ரோகித் சர்மா பூரண குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்புவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Rohith

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் அவர் இங்கிலாந்து அணிக்கெதிரான இந்த கடைசி டெஸ்ட் போட்டியை தவற விடுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள ரோகித் சர்மாவின் உடல்நிலையை பிசிசிஐயின் மருத்துவ குழு கண்காணித்து வருகிறது. இந்நிலையில் ரோகித் சர்மா இந்த போட்டியில் விளையாடவில்லை என்றால் இந்திய அணியின் கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா செயல்படுவார் என்று கூறப்படுகிறது.

அதேவேளையில் ரோஹித் சர்மாவிற்கு பதிலாக கேப்டனாக பும்ரா செயல்பட்டாலும் தற்போதுள்ள இந்திய அணியில் சுப்மன் கில்லுடன் துவக்க வீரராக யார் களமிறங்குவார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இந்த இங்கிலாந்து தொடருக்கு முன்னர் மற்றொரு தொடக்க வீரரான கே.எல் ராகுல் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவரும் இந்த இங்கிலாந்து தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Vihari

தற்போது ரோஹித்தும் விளையாட முடியாத சூழ்நிலையில் சுப்மன் கில்லுடன் துவக்க வீரராக களம் இறங்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு பதிலாக தற்போது இரண்டு வீரர்கள் துவக்க வீரருக்கான இடத்திற்கு போட்டிபோட்டு காத்திருக்கின்றனர். அதில் ஒருவர் ஹனுமா விகாரி : டெஸ்ட் போட்டியில் இவர் துவக்க வீரராக களமிறங்குவது புதிது கிடையாது. ஏனெனில் கடந்த 2018 ஆம் ஆண்டு மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணிக்காக இவர் துவக்க வீரராக களம் இறங்கியுள்ளார்.

- Advertisement -

ஆனாலும் அந்த போட்டியில் பெரிய அளவு ரன்களை குவிக்கவில்லை. முதல் இன்னிங்சில் 8 ரன்களிலும், இரண்டாவது இன்னிங்சில் 13 ரன்களை மட்டுமே அடித்திருந்தார். புதிய பந்தில் விளையாட தடுமாறும் விகாரி மிடில் ஆர்டரில் எப்போதுமே அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ரோஹித்தின் இடத்திற்கு இரண்டாவது வீரராக போட்டியில் இருப்பவர் கே.எஸ்.பரத்.

bharat 1

இந்திய அணியின் பேக்கப் டெஸ்ட் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எஸ்.பரத் தொடர்ந்து இந்திய அணியுடன் பயணித்தாலும் அவருக்கு பிளேயிங் லெவனில் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. ஆனால் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் நடைபெற்று வரும் பயிற்சி போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க : 41 முறை சாம்பியனான மும்பைக்கு ஷாக் கொடுத்த கத்துக்குட்டி, புதிய வரலாறு – குவியும் வாழ்த்துக்கள்

இந்த பயிற்சி போட்டியின் முதல் இன்னிங்சில் அரை சதம் அடித்த பரத் இங்கிலாந்திலும் சிறப்பாக விளையாட முடியும் என்பதை நிரூபித்துள்ளார். எனவே அவரும் துவக்க வீரருக்கான போட்டியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரில் எந்த வீரர் துவக்க வீரராக களம் இறங்கினால் நன்றாக இருக்கும் என்பது குறித்த உங்களது கருத்து என்ன? கமென்ட் செக்ஷனில் பதிவிடலாம் நண்பர்களே.

Advertisement