சென்னை அணி கொடுத்த ஆஃபரை தூக்கி எறிந்த 2 வெளிநாட்டு வீரர்கள் – என்னப்பா இது சி.எஸ்.கேவுக்கு வந்த சோதனை

CSK-1
- Advertisement -

14வது ஐபிஎல் லீக் தொடர் வருகிற ஏப்ரல் ஒன்பதாம் தேதி தொடங்கப்பட்டு மே 30ஆம் தேதி வரை நடக்க இருக்கிறது. முதல் போட்டி வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டியாக அமைய உள்ளது. அனைத்து அணிகளும் ஐபிஎல் தொடருக்கு மிகத் தீவிரமாக தயாராகி கொண்டு வரும் வேளையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜோஷ் ஹேசல்வுட் ஐபிஎல் தொடரில் இருந்து தீடீரென வெளியேறியுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் அவருக்கு மாற்று வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தேடி வர, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விருப்பத்தை இரண்டு சர்வதேச வேகப்பந்து வீச்சாளர்கள் நிராகரித்து உள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் ஜோஷ் ஹேசல்வுட் தன்னால் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாது என்று கூறி வெளியேறி விட்டார்.

இந்நிலையில் அவருக்கு தகுந்த மாற்று வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தேடி வந்தது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பில்லி ஸ்டைன்லேக் மற்றும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான டாப்லியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்கள் அணிக்கு ஆடுமாறு விருப்பத்தை தெரிவித்து.

hazlewood

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விருப்பத்தை அவ்விரு வீரர்களும் நிராகரித்துள்ளனர். இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக அவ்விரு வீரர்களும் ஐபிஎல் விளையாட மறுத்து விட்டதாக ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹேசல்வுட்டுக்கு தகுந்த மாற்று வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கூடிய விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

hazlewood 1

இதேபோல சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் ஆல் ரவுண்டர் வீரரான மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியதை அடுத்து அவருக்கு தகுந்த மாற்று வீரராக இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement