சி.எஸ்.கே அணியில் பிளேயிங் லெவன்ல வாய்ப்பு கிடைக்காமல் வெளியில் அமரபோகும் 2 வீரர்கள் – விவரம் இதோ

CSK-1
- Advertisement -

14வது ஐபிஎல் லீக் தொடர் இன்று தொடங்குகிறது முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதி வருகின்றன. நாளை நடக்க இருக்கிற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேப்பிடல் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட போகும் வீரர்களைப் பற்றி செய்திகள் வெளியாகியுள்ளன. நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட போகும் அந்த 11 வீரர்கள் :

- Advertisement -

ராபின் உத்தப்பா, ருத்ராஜ், சுரேஷ் ரெய்னா, டுப்லஸ்ஸிஸ், மகேந்திர சிங் தோனி, ரவிந்திர ஜடேஜா, சாம் கர்ரன், மொயின் அலி, தீபக் சஹர், ஷர்துல் தாகூர், பிராவோ

தொடக்க ஆட்டக்காரர் வீரர்களாக ருத்ராஜ் மற்றும் உத்தப்பா களம் இறங்குவார்கள். அதன் பின்னர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக டுப்லஸ்ஸிஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா களம்இறங்கப்போவதால், அம்பத்தி ராயுடுவுக்கு எந்தவித வாய்ப்பும் வழங்கப் போவதில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. உள்ளூர் தொடர்களில் சிறப்பாக ஆடி வரும் உத்தப்பாவின் சேர்க்கையாலும் சுரேஷ் ரெய்னாவின் வருகையாலும் அம்பத்தி ராயுடு வுக்கு இந்த தொடர் முழுவதும் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்றே தெரிகிறது.

Raina

அதைப்போல ஸ்பின் பவுலர்களாக ரவீந்திர ஜடேஜா எல்லா போட்டிகளும் ஆடுவார். மற்றொரு ஸ்பின் வீரராக அலியும் ஆடும் பச்சத்தில் கிருஷ்ணப்ப கவுதம் நிச்சயமாக வெளியே உட்கார வைக்கப்படுவார் என்று தெரிகிறது. மேலும் இளம் வீரரான சாய் கிஷோருக்கும் இதே நிலைமை தான்.

பிராவோ அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா என்று கேட்டால் சந்தேகமே, பிராவோவுக்கு பதிலாக முழு வேகப்பந்து வீச்சாளரை சென்னை அணி நிர்வாகம் விளையாட வைக்க யோசித்து வருகிறது. அவருக்கு மாற்று வீரராக லுங்கி இங்கிடி அல்லது வேறு யாராவது விளையாடுவார்கள் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

Advertisement