PAK vs NZ : 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நிகழ்ந்த அரிதான நிகழ்வு – ரசிகர்கள் வியப்பு

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் வைட் வாஷ் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் கடந்த மார்ச் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் கடைசி போட்டியில் தோற்று 1 – 0 (3) என்ற கணக்கில் தொடரை இழந்தது. அதனால் வரலாற்றில் முதல் முறையாக சொந்த மண்ணில் 4 தொடர்ச்சியான டெஸ்ட் போட்டிகளில் தோற்று சரித்திர வீழ்ச்சியை சந்தித்துள்ள பாகிஸ்தான் 2022 ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை உட்பட இந்த வருடம் ஏராளமான தோல்விகளை சந்தித்து கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

அதனால் வாயில் மட்டும் பேசிக் கொண்டிருந்த பாகிஸ்தான் வாரிய தலைவர் ரமீஷ் ராஜா அதிரடியாக நீக்கப்பட்டு முன்னாள் தலைவர் நஜாம் செதி மீண்டும் பொறுப்பேற்றார். அத்துடன் ஏற்கனவே இருந்த தேர்வுக்குழு தலைவர் நீக்கப்பட்டு புதிய தலைவராக முன்னாள் நட்சத்திர வீரர் சாகித் அப்ரிடி நியமனம் செய்யப்பட்டார். அவரது தலைமையில் அடுத்ததாக நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டியில் கொண்ட டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான அணி அறிவிக்கப்பட்டது. அதில் பாபர் அசாம் தொடர்ந்து கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது மீண்டும் விக்கெட் கீப்பராக அணிக்குள் கொண்டு வரப்பட்டார்.

- Advertisement -

அரிதான நிகழ்வு:
அந்த நிலையில் டிசம்பர் 26ம் தேதியன்று பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் முதல் முதல் போட்டி கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ஏற்கனவே பைனல் செல்லும் வாய்ப்பை இவ்விரு அணிகளுமே இழந்து விட்ட நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து துவங்கிய போட்டி நடைபெறும் கராச்சி மைதானம் சுழலுக்கு சாதகமாக இருந்ததை கணித்த நியூசிலாந்து கேப்டன் டிம் சவுதி ஆரம்பத்திலேயே கடந்த வருடம் இந்தியாவுக்கு எதிராக மும்பையில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்களை எடுத்து உலக சாதனை படைத்த அஜாஸ் பட்டேலுக்கு வாய்ப்பு கொடுத்தார்.

அதில் ஆரம்பத்திலேயே சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தத் துவங்கிய அவரது 4வது ஓவரின் 3வது பந்தில் இறங்கி வந்து அடிக்க முயற்சித்த பாகிஸ்தான் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் பந்தை தவற விட்டதை பயன்படுத்திய விக்கெட் கீப்பர் டாம் ப்ளன்டல் கச்சிதமாக ஸ்டம்பிங் செய்து 7 ரன்களில் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஷான் மசூத் 10 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் மற்றொரு ஸ்பின்னர் மைக்கேல் பிரேஸ்லெஸ் வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்து பந்தை நழுவ விட்டார்.

- Advertisement -

அதை கச்சிதமாக பிடித்த விக்கெட் கீப்பர் டாம் ப்ளெண்டல் மீண்டும் துல்லியமாக ஸ்டம்பிங் செய்து அவரை 3 ரன்களில் அவுட்டாக்கினார். மொத்தத்தில் பாகிஸ்தானின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் முறையில் பேட்ஸ்மேன்கள் அவுட்டாவது மிகவும் அரிதாகும். அதிலும் போட்டி துவங்கியதுமே பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் பந்து வீசுவார்கள் என்பதால் எட்ஜ், போல்ட், எல்பிடபிள்யு, கேட்ச் ஆகிய முறைகளில் தான் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அவுட்டாவார்கள்.

ஆனால் அவை அனைத்திற்கும் விதிவிலக்காக இப்போட்டியில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த ஸ்டம்பிங் முறையில் 2 விக்கெட்டுகள் விழுந்தன. சொல்லப்போனால் 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் குறிப்பாக ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வு அரங்கேறியதில்லை. மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமே ஜமைக்காவில் கடந்த 1976ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போன்ற நிகழ்வு நடந்தது.

இதையும் படிங்கஇவர் தான் பாகிஸ்தானின் புதிய தேர்வுக்குழு தலைவரா? முன்னாள் நட்சத்திர பாக் வீரரை வெறித்தமான கலாய்த்த டேனிஷ் கனேரியா

அதனால் ரசிகர்கள் வியந்த இப்போட்டியில் தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தானுக்கு ஷாக்கீல் 22 ரன்களிலும் இமாம்-உல்-ஹக் 24 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றினார்கள். இருப்பினும் மறுபுறம் கேப்டன் பாபர் அசாம் நங்கூரமாக நின்று அரை சதம் கடந்ததால் முதல் நாள் உணவு இடைவெளியில் பாகிஸ்தான்
115/4 என்ற ஸ்கோருடன் விளையாடி வருகிறது.

Advertisement