எழுதி வெச்சுக்கோங்க, 120% பாகிஸ்தான் இந்தியாவுக்கு வந்து விளையாடுவாங்க – காரணத்துடன் அடித்துக்கூறும் முன்னாள் வீரர்

INDvsPAK-1
- Advertisement -

2023 ஆசிய கோப்பை விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தானிடையே மிகப்பெரிய சர்ச்சையாகவும் விவாதமாகவும் நடைபெற்று வருகிறது. ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் ஏற்கனவே எல்லை பிரச்சினை காரணமாக கடந்த 10 வருடங்களாக இருதரப்பு தொடர்களில் மோதுவதை தவிர்த்து விட்டு ஆசிய மற்றும் ஐசிசி உலகக் கோப்பைகளில் மட்டும் மோதி வருகின்றன. அந்த வரிசையில் 2022ஆம் ஆண்டு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பொறுப்பேற்ற பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தலைமையில் 2023 ஆசிய கோப்பையை நடத்தும் உரிமையை உறுப்பு நாடுகளின் சம்மதத்துடன் பாகிஸ்தான் வாங்கியது.

Jay Shah Najam Sethi

- Advertisement -

ஆனால் இந்திய அரசின் அனுமதியை தாண்டி எல்லை பிரச்சினை காரணமாக பாகிஸ்தானுக்கு சென்று 2023 ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காது என கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிவித்த ஜெய் ஷா அத்தொடரை பொதுவான இடத்தில் நடத்துவதற்கான அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதனால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் வாரியம் எங்களது நாட்டுக்கு வராமல் போனால் வரும் அக்டோபர் மாதம் உங்களது நாட்டில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்களும் வரமாட்டோம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

120% வருவாங்க:
அந்த நிலையில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று பக்ரைனில் நடைபெற்ற ஆசிய கவுன்சில் கூட்டத்தில் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியும் பிடி கொடுக்காத ஜெய் ஷா அதைப்பற்றிய இறுதி முடிவை அடுத்த கூட்டத்திற்கு தள்ளி வைத்து விட்டதாக செய்திகள் வெளியானது. அதனால் கோபமடைந்த புதிய பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜாம் சேதி எங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் உங்கள் நாட்டுக்கு நாங்களும் வரமாட்டோம் என்று இம்முறை நேரடியாகவே ஜெய் ஷா’விடம் எச்சரிக்கையுடன் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.

IND vs PAK Babar Azam Rohit Sharma

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு வராமல் போனால் இந்தியா நரகத்தை சந்திக்க நேரிடும் என்று முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் பகிரங்கமாக எச்சரித்து புதிய புயலை கிளப்பினார். இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்ன பேசினாலும் அவர்கள் இந்தியாவுக்கு வந்து 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடுவது 120% உறுதி என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஏனெனில் நேற்று முன்தினம் நடைபெற்ற பிஎஸ்எஎல் கண்காட்சி போட்டி தாக்குதலால் பாதியில் நிறுத்தப்பட்டு பாபர் அசாம் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டது உலக அளவில் வைரலானது. அதனால் பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாமலேயே ஆசிய கோப்பை பொதுவான இடத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஆசிய கோப்பையில் பங்கேற்க தங்கள் நாட்டுக்கு வரவில்லை என்றால் இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பங்கேற்க நாங்கள் வரமாட்டோம் என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். முதலில் அது நடக்குமா? இந்த இடத்தில் நான் உங்களுக்கு பேப்பரில் எழுதி ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அதாவது ஆசிய கோப்பை நடந்தாலும் இல்லையென்றாலும் இந்தியாவுக்கு வந்து பாகிஸ்தான் விளையாடுவது 120% உறுதியாக நடக்கும். ஏனெனில் பாகிஸ்தான் உலகக் கோப்பையை புறக்கணித்தால் அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். அது தான் என்னுடைய கருத்தாகும்”

chopra

“இந்த ஆசிய கோப்பை பற்றி நிறைய விவாதங்கள் காணப்படுகின்றன. மேலும் சமீபத்திய ஆசிய கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த இடத்தில் என்னிடம் 2 – 3 கருத்துக்கள் உள்ளன. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன் பிஎஸ்எல் தொடருக்கான ஒரு கண்காட்சி போட்டி நடைபெற்றது. ஆனால் அப்போட்டி நடைபெற்ற மைதானத்தின் அருகில் நிகழ்ந்த தாக்குதல் காரணமாக அந்த போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் இந்த சமயத்தில் அது அங்கே நடந்திருக்கக் கூடாது. நல்ல வேளையாக அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர்”

இதையும் படிங்க: வங்கதேசத்தை அடிச்சா போதாது, இங்க சதமடிச்சு சாதனையின் தரத்தை நிரூப்பிங்க – நட்சத்திர இந்திய வீரருக்கு கங்குலி அட்வைஸ்

“அதன் காரணமாக நிச்சயம் இந்தியா அங்கு செல்லாது. மேலும் இந்திய அரசின் சம்மதம் இல்லாத காரணத்தால் பிசிசிஐ அதற்கு அனுமதி கொடுக்காது. எனவே பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது என்பது இதிலிருந்தே உறுதியாகி விட்டது. என்னை பொறுத்த வரை தொடரை நடத்தும் உரிமை வைத்துள்ள பாகிஸ்தான் அதை துபாயில் நடத்தி தேவையான பணத்தை சம்பாதித்துக் கொள்ளலாம்” என்று கூறினார்.

Advertisement