ஐபிஎல் போட்டியில் கோடிகளில் வாங்கப்பட்டு “சொதப்பிய” 11 வெளிநாட்டு வீரர்கள்..! – சென்னை வீரர் யார் தெரியுமா..?

mucculum
- Advertisement -

ஐபிஎல் போட்டியின் 11 வது சீசனின் லீக் போட்டிகள் கடந்த திங்கள்கிழமையுடன் (மே 20) முடிவடைந்துவிட்டது. பிலே ஆப் சுற்றிற்கு நுழைய பல்வேறு அணிகளும் கடுமையாக போராடிய நிலையில் இறுதியில் 4 அணிகள் பிலே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றுவிட்டது.

tahir

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் மட்டுமல்ல ஐபிஎல் தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே பல்வேறு வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்கள் ஐ.பி.எல் அணி அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டு வருகின்றனர். அதில் இந்த ஆண்டு கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்டு சிறப்பாக விளையாட தவறிய 11 வீரர்களின் பட்டியலை காண்போம். இது பெஸ்ட் 11 அல்ல, ஒர்ஸ்ட் 11 வீரர்கள்.

ஆர்கி ஷார்ட்:- ஆஸ்திரேலிய பிக் பாஷ் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர். இந்த ஆண்டு ராஜஸ்தான் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 115 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். அதில் அதிகபட்சமாக 44 எடுத்துள்ளார்.

maxwell

மேக்ஸ்வெல்:- ஆஸ்திரேலிய அதிரடி பேட்ஸ்மேன், இவரை நம்ம ஊரு பாஷையில் காட்டான் என்று கூட கூறலாம். டெல்லி அணியால் 9 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட இவர், இந்த தொடரில் இவரது பேட்டிங் சராசரி 14 மட்டுமே. இதுவரை 12 போட்டிகளில் 169 ரன்களை மட்டுமே இந்த அதிரடி பேட்ஸ்மேனால் சேர்க்க முடிந்தது.

- Advertisement -

ஆரோன் பிஞ்ச்:- ஐவரும் ஒரு ஆஸ்திரேலிய வீரர் தான், இந்த ஆண்டு பஞ்சாப் அணியால் ஏலம் எடுக்கப்ட்டார். இந்த தொடரில் ஒரு சில போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். 10 போட்டிகளில் விளையாடி 134 ரன்களை பெற்றுள்ளார்.

இம்ரான் தாஹிர் :- தென்னாப்ரிக்கா சூழல் பந்து வீச்சாளரான இவர் இந்த ஆண்டு சென்னை அணியில் விளையாடி வருகிறார். இந்த தொடரில் சிறப்பாக செயல்படாததால் இவருக்கு 6 போட்டிகளில் மட்டுமே வாய்ப்பளிக்கபட்டது. அந்த 6 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

mithel

மிட்ஷெல் ஜான்ஸன்:- ஆஸ்திரேலிய அணியின் ஆக்ரோஷமான பந்துவீச்சாளர். கொல்கத்தா அணியால் ஏலம் எடுக்கப்பட்ட இவர் இத தொடரில் தனது பந்துகளில் வீக்கத்தை இழந்தது போல 10 போட்டிகளில் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார்.

பென் ஸ்டோக்ஸ்:- இங்கிலாந்து விக்கெட் கீப்பராக இவர் இந்த ஆண்டு ராஜஸ்தான் அணியால் 12.50 கோடி என்ற பி[பெரும் தொகை கொடுத்து வாங்கப்பட்டார். ஆனால் இவரது செயல் திறன் அந்த அளவிற்கு இந்த தொடரில் இல்லை. 13 போட்டிகளில் இவர் எடுத்துள்ள ரன்கள் 136 மட்டுமே.

- Advertisement -

கெய்ரன் பொலார்ட்:- மேற்கிந்திய தீவுககல் அணியின் சிறந்த ஆல் ரவுண்டர். பௌலிங் மற்றும் பேட்டிங் இரண்டிலுமே சிறப்பாக செயல்படக்கூடிய இவருக்கு, இந்த ஐபிஎல் தொடர் கைகொடுக்கவில்லை. சில ஆண்டுகளாக மும்பை அணியில் இருந்து வரும் இவர் இந்த தொடரில் 7 போட்டிகளில் 76 ரன்களை எடுத்துள்ளார்.

Pollard (1)

பிரண்டன் மெக்கல்லம்:- நியூசிலாந்து அதிரடி வீரரான இவர், இந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணியில் விளையாடி வந்தார் . 6 போட்டிகளில் 127 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இவரது பேட்டிங் சராசரியை எடுத்துக் கொண்டால் ஒரு போட்டிக்கு 21 ரன்கள் என்ற வீதம் மட்டுமே வருகிறது.

காலின் முன்ரோ:- டி20 பேட்ஸ்மேன் தர வரிசையில் 2-ம் இடத்தில் இருக்கும் இந்த நியூசிலாந்து வீரர், இந்த ஆண்டு டெல்லி அணியில் விளையாடி வந்தார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

corey

கோரி ஆன்டர்ஸன்:- இங்கிலாந்து அணியில் சிறந்த ஆள் ரௌண்டரான இவர், சில மாதங்களாக அந்த அணியில் சிறப்பாக செய்லபடவீல்லை. அப்படி இருந்தும் இவரை பெங்களூரு அணி எலாம் எடுத்தது. ஆனால் இங்கும் அதே நிலைமை தான். இவர் விளைய்டியா 3 போட்டிகளில் 17 ரன்களை எடுத்து 3 விக்கட்டுகளை மட்டுமே இவரால் எடுக்க முடிந்தது.

Advertisement