- Advertisement -
உலக கிரிக்கெட்

உலகின் டாப் 100 விளையாட்டு வீரர்கள்..! இதில் 11 பேர் இந்தியர்கள்…. யார் யார் தெரியுமா..?

பிரபல இஎஸ்பிஎன் தொலைக்காட்சி நிறுவனம் உலகில் உள்ள டாப் 100 இடத்தில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 11 இந்தியர்கள் முதல் 100 இடத்தில் இடம்பெற்றுள்ளனர். மேலும் கிரிக்கெட்டிலிருந்து 9 வீரர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

இந்த பட்டியல் 3 அடிப்படை தகுதிகளை வைத்து வெளியிட்டுள்ளது இஎஸ்பிஎன் நிறுவனம். அதில் கூகுளில் தேடப்படுவது, சமூக தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற தளங்களில் எத்தனை பேர் அவர்களை பின் தொடர்கின்றனர், விளம்பரங்கள் மூலம் அவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்ற 3 குறுகள் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் வீரர்கள் விவரம் இதோ:-

1. ரோஹித் சர்மா 30 வது இடத்திலும்
2.சுரேஷ் ரெய்னா 41 வது இடத்திலும்
3.யுவராஜ் சிங் 57வது இடத்திலும்
4.ரவிச்சந்திரன் அஸ்வின் 71 வது இடத்திலும்
5.ஹர்பஜன் சிங் 80 வது இடத்திலும்
6.கவுதம் கம்பீர் 83 வது இடத்திலும்
7.ஷிகார் தவன் 94 வது இடத்திலும் இருக்கின்றனர்.

இதில் இந்திய கிரிக்கெட் வீரர் கேப்டன் விராட் கோலி 11வது இடத்தில் உள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கூல் மகேந்திர சிங் தோனி 20 வது இடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் கடைசி இடத்தில் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இருக்கிறார்.

இந்த பட்டியலில் கடந்த ஆண்டு முதல் இடத்தில இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த ஆண்டும் முதலிடத்தில் உள்ளார். இரண்டவது சர்வதேச கூடைப்பந்து வீரராணா லெப்ரான் ஜேம்ஸ் என்பவரும். பார்சிலோனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர். இந்த பட்டியலில் முதல் 10 இடங்களில் ஒரு இந்திய விளையாட்டு வீரரும் இல்லை என்பது சற்று கவலை அளிக்கிறது.

- Advertisement -