ஓய்வு பெற்று 10 வருடமாகியும் பார்டர் – கவாஸ்கர் கோப்பையின் நாயகனாக சச்சின் படைத்துள்ள 10 சாதனைகளின் பட்டியல்

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆரம்ப காலங்களில் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் சாதாரண தொடர்களாக நடைபெற்றது. இருப்பினும் கிரிக்கெட்டின் முதல் அசுரனாக அவதரித்த வெஸ்ட் இண்டீசின் வீழ்ச்சி துவங்கிய 90களில் ஆஸ்திரேலியா அபார எழுச்சி கண்டது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலியாவுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்தியாவும் மிகப்பெரிய வளர்ச்சி கண்டது. அதனால் இரு நாடுகளும் தொடர்ந்து டெஸ்ட் தொடர்களில் மோதிக் கொள்வது என்ற முடிவெடுத்ததுடன் அந்த தொடருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை முதல் முறையாக கடந்த தங்களது ஜாம்பவான் வீரர்கள் சுனில் கவாஸ்கர் – ஆலன் பார்டர் ஆகியோரது பெயரையும் சூட்டின.

IND-vs-AUS

- Advertisement -

அப்படி உதயமான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் இம்முறை இந்தியாவில் பிப்ரவரி 9 முதல் கோலாகலமாக துவங்குகிறது. கடந்த 1996/97 முதல் நடைபெற்று வரும் இத்தொடரில் இம்முறை விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இரு அணிகளிலும் நேருக்கு நேர் மோதுவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அத்துடன் வரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மோதப் போகும் அணிகளை தீர்மானிக்கும் இத்தொடர் உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்லலாம்.

நாயகன் சச்சின்:
முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சர்வதேச கிரிக்கெட்டிலும் பேட்டிங் துறையில் ஏறக்குறைய அத்தனை சாதனங்களையும் படைத்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த சச்சின் டெண்டுல்கர் மகத்தான வீரர் என்பதை அனைவரும் அறிவோம். அதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக உலகின் மிகச்சிறந்த பந்து வீச்சு கூட்டணியை அந்த காலம் முதல் இந்த காலம் வரை கொண்டுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் இந்த பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் பேட்டிங் துறையின் அனைத்து சாதனைகளையும் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார்.

Sachin

குறிப்பாக 2013இல் ஓய்வு பெற்ற அவர் இந்த தொடரில் படைத்துள்ள சாதனைகளை இன்னும் விராட் கோலி போன்ற வீரர்களால் உடைக்க முடியவில்லை என்பதே அவரது தரத்திற்கு மற்றுமொரு சான்றாகும். அந்த சாதனைகளை பற்றி பார்ப்போம் (தனித்தனியான பிரிவுகள் சேர்த்து 10 சாதனைகள்):

- Advertisement -

1. அதிக ரன்கள்: பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரராக 3262 ரன்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 2555 ரன்களுடன் 2வது இடத்தில் இருக்கிறார். தற்சமத்தில் விளையாடும் வீரர்கள் என்று பார்த்தால் புஜாரா 1893 ரன்களுடன் 6வது இடத்தில் இருக்கிறார்.

Sachin Tendulkar Sourav Ganguly vs ENG

2. அதிக சதங்கள்: இந்த தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரராகவும் சச்சின் டெண்டுல்கர் 9 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரிக்கி பாண்டிங், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தலா 8 சதங்களுடன் 2வது இடத்தில் உள்ளனர்.

- Advertisement -

3. அதிக அரை சதங்கள்: இந்த தொடரில் அதிக அரை சதங்கள் அடுத்த வீரராகவும் சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார். 16 அரை சதங்களுடன் முதலிடத்தில் இவருக்கு அவருக்கு அடுத்த படியாக 13 அரை சதங்களுடன் ராகுல் டிராவிட் 2வது இடத்தில் உள்ளார். அது போக அதிக முறை 150+ ரன்கள் (6) அடித்த வீரராகவும் சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்துள்ளார்.

4. அதிக பவுண்டரி, சிக்ஸர்கள்: அதே போல் இந்த தொடரில் அதிக பவுண்டரிகள் (391) மற்றும் சிக்சர்கள் (25) அடித்த வீரராகவும் சச்சின் சாதனை படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிக பவுண்டரிகள் அடித்த வீரராக விவிஎஸ் லக்ஷ்மன் (338) அதிக சிக்சர்கள் அடித்த வீரராக மேத்யூ ஹெய்டன் (24) உள்ளனர்.

- Advertisement -

5. அதிக பார்ட்னர்ஷிப்: மேலும் இந்த தொடரில் அதிக முறை 100 ரன்கள் (20) பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 2வது இடத்தில் ரிக்கி பாண்டிங் (15 முறை) உள்ளார்.

இதையும் படிங்க: எழுதி வெச்சுக்கோங்க, 120% பாகிஸ்தான் இந்தியாவுக்கு வந்து விளையாடுவாங்க – காரணத்துடன் அடித்துக்கூறும் முன்னாள் வீரர்

6. அதிக விருதுகள்: மேலும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் அதிக ஆட்டநாயகன் (5) விருதுகளை வென்ற வீரர் என்ற சாதனையும் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். அத்துடன் அதிக தொடர் நாயகன் (3) விருதுகளை வென்ற வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அவரை தவிர்த்து வேறு எந்த வீரரும் 2 தொடர் நாயகன் விருது வென்றதில்லை.

Advertisement