பிற அணிகளை ஓட விட்டோம்..! இவர்களை தான் நம்பினோம் ..! – வெற்றி ரகசியத்தை உடைத்த CSK பயிற்சியாளர்..?

flemming1
- Advertisement -

ஐபிஎல் தொடரில் 3 வது முறையாக வென்று சென்னை அணி சாதனை படைத்தது. இந்த தொடரில் விளையாடிய சென்னை அணியை பல்வேறு தரப்பினரும் சென்னை அணியயை வயதான வீரர்களை கொண்டுள்ளது என்று கிண்டல் செய்து வந்தது. ஆனால் வீரர்களை நாங்கள் திட்டமிட்டு தான் தேர்தெடுத்தோம் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார்.
dhoni

இந்த ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் மற்ற அணிகளை காட்டிலும் சென்னை அணியில் தான் 32 வயதிற்கு மேலே இருந்த வீரர்கள் அதிகம் இருந்தனர். இதனால் இந்த அணி அப்பாக்கள் விளையாடும் அணி என்று கிண்டல் செய்து வந்தனர். ஆனால் ஏலத்தின் போது மற்ற அணிகள் புள்ளி விவரத்தின்படி வீரர்களை தேர்வு செய்து வந்தனர். ஆனால் நாங்கள் வீரர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையின் மீது ஏலம் எடுத்தோம்.
ஏலத்தின் போது மற்ற அணிகள் அணிகள் அனைவரும் புள்ளி பட்டியலில் கையில் வைத்துக் கொண்டு வீரர்களை ஏலம் எடுத்தனர்.

- Advertisement -

ஆனால் நாங்கள் அனுபவத்தின் மீதும் நம்பிக்கை வைத்து முதலீடு செய்தோம் இதனால் எங்களுக்கு சிறப்பான அணி அமைந்தது என்று பிளமிங் கூறியுள்ளார்.இதுபற்றி அவர் தெரிவிக்கையில் “மற்ற அணிகளை போல நாங்கள் புள்ளி விவரத்தை நம்ப வில்லை மாற்றாக எங்கள் உள்ளுணர்வு மற்றும் கிரிக்கெட் உணர்வின் மீது நம்பிக்கை வைத்தோம். வீரர்களை தேர்வு செய்வதில் எங்கள் ஆளுமையை பயன்படுத்தினோம்.நாங்கள் வீரர்கள் மீது நம்பிக்கை வைப்பவர்கள், தொடர்ந்து இப்படித்தான் அணுகுவோம்.
flemming

தோனி எனும் வலுவான தலைவரின் கீழ் வீரர்களுக்கு ஊட்டப்பட்ட நம்பிக்கை, வலுவான அவர்களது பங்கு ஆகியவை எங்களுக்குச் சாதகமானது. எங்கள் அணியயை வயதான அணி என்றனர் அதனால் தொழில் ரீதியான வீரர்கள் பங்களிப்பு செய்ய முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்து போட்டியக்ளர்களை தேர்வு செய்தோம்” என்று கூறியிருந்தார்.

Advertisement