சி.எஸ்.கே-க்கு ஏற்பட்ட முதல் அடி. தொடர் முழுவதிலும் இருந்து வெளியேறிய நட்சத்திர வீரர் – ஷாக்கிங் ரிப்போர்ட்

CSKShop
- Advertisement -

இன்னும் இரண்டு நாட்களில் இந்தியாவின் மிகப்பெரும் கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்த 12வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்கான சென்னை அணி தற்போது சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகிறது.

Ipl cup

- Advertisement -

கடந்த 2018ஆம் ஆண்டு ஐ.பி.எல் கோப்பையை சென்னை அணி கைப்பற்றியது. அதனை அடுத்து இந்த ஆண்டும் கோப்பையை தக்கவைத்துக்கொள்ள சென்னை அணி உத்வேகம் காட்டும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணிக்கு ஒரு பின்னைடைவு ஏற்பட்டுள்ளது. அது யாதெனில் சென்னை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

தென்னாபிரிக்க அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளரான லுங்கி நெகிடி. இவர் கடந்த ஆண்டு சென்னை கோப்பையை கைப்பற்ற தனது சிறப்பான பந்துவீச்சின் மூலம் உதவி புரிந்தார். தற்போது அவர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்றபோது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இந்த காயம் குணமடைய 4 வாரங்கள் ஆகும் என மருத்துவ குழு தெரிவித்ததால் அவர் இந்த ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

KKRvCSK_

மேலும், உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு தென்னாபிரிக்க நிர்வாகமும் அவரை ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. தென்னைப்பிரிக்க அணியின் வளர்ந்துவரும் இளம் நச்சத்திர பந்துவீச்சாளரான நெகிடிக்கு தற்போதைய வயது 22 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement