வாழ்வா சாவா நிலையில் 5 அணிகள்..! ஐபிஎல் ட்விஸ்ட்.! யார் உள்ளே யார் வெளியே..?

ipl-2018
- Advertisement -

நடந்து வரும் ஐ.பி.எல் போட்டியில் இரண்டு அணிகள் பிளே ஆப் சுற்றிற்கு நுழைந்துவிட்ட நிலையில், மீதமுள்ள 3 மற்றும் 4 வது இடத்தை பிடிக்க டெல்லி அணியை தவிர மற்ற அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது. இதில் அதிகப்படியான வாய்ப்பு கொல்கத்தா, மும்பை , பெங்களூரு போன்ற அணிகளுக்கு உள்ளது.

ipl 2018

- Advertisement -

புள்ளிபட்டியலில் 6 மற்றும் 7 வது இடத்தில இருக்கு ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணி – ரன் விகிதத்தில் இருக்கிறது. மேலும் 3 முதல் 7 ஆம் இடத்தில் இருக்கும் அணிகள் அனைத்தும் இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 13 புள்ளிகளுடன் சமமாக உள்ளது.

இந்த 5 அணிகளுக்குமே இன்னும் ஒரு போட்டி மட்டும் எஞ்சியுள்ள நிலையில், அந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று கட்டாயத்தில் உள்ளது. இந்த அணிகள் வெற்றிபெற்றாலும் மற்ற அணிகள் பெரும் தோல்வியை பொறுத்தே பிளே ஆப் வாய்ப்பு நிர்ணயிக்கபடும்.

நாளை நடக்கவிருக்கு பெங்களூரு மற்றும் ராஜஸ்தானுக்கு இடையேயான போட்டி, இந்த இரு அணிகளின் பிளே ஆப் வாய்ப்பை நிர்ணயித்து விடும். இந்த போட்டியில் எந்த அணி அதிக ரன் விகிதத்தில் வெற்றிபெறுகிறதோ அந்த அணிக்கு பிளே ஆப் சுற்றிற்கு நுழையும் வாய்ப்பு நீடிக்கும்.

- Advertisement -

அதே போன்று நாளை நடக்கவுள்ள மற்றொரு போட்டியில் கொல்கத்தா அணி ஏற்கனவே பிளே ஆப்பிற்கு தகுதி பெற்ற ஹைதராபாத் அணியுடன் மோதப்போகிறது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி வென்றால் மட்டும் போதும், பிலே ஆப் சுற்றிற்கு நுழைந்து விடலாம். ஒருவேளை இந்த போட்டியில் தோற்றுவிட்டால் அந்த அணி மற்ற அணிகள் குறைவான ரன் விகிதத்தில் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொள்ள வேண்டும்.

080415_csk dp 2

மும்பை அணியை பொறுத்த வரை இன்னும் ஒரே ஒரு போட்டி டெல்லியுடன் இருக்கிறது. இந்த போட்டியில் மும்பை அணி மிகப்பெரிய வெற்றியை பெற்றாலும், கொல்கத்தா அணியியும் , பஞ்சாப் அணியும் விளையாடும் அவர்களது கடைசி லீக் போட்டியில் தோற்றால் மட்டுமே மும்பை அணிகயின் பிளே ஆப் கனவு பலிக்கும். இதே நிலைமை தான் பஞ்சாப் அணிக்கும் இந்த அணி பெரிய வெற்றியை பெற்று மும்பை மற்றும் கொல்கத்தா அணி தோற்க வேண்டும் என்று காத்துக்கொண்டிருக்க வேண்டும்.

Advertisement