தோனியின் விருப்பத்தை அப்படியே பின்தொடரும் அவரது 4 வயது மகள் – புகைப்படத்தை பார்த்தால் பாராட்டி தள்ளுவீங்க

Ziva
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனி தற்போது இந்திய ராணுவத்துடன் பயிற்சியினை ஜம்மு காஷ்மீர் பகுதியில் மேற்கொண்டு வருகிறார். அவருடைய பயிற்சி காலம் ஆகஸ்ட் 15ம் தேதி லே பகுதியில் கொடியேற்றத்துடன் முடிவடைகிறது.

- Advertisement -

தோனி இந்திய நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்திய ராணுவத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடைய விருப்பம் மிலிட்டரி உடை அணிவது, ராணுவ சேவையில் ஈடுபடுவது போன்றவை என்றால் அவரின் மகளும் தற்போது தந்தையைப் போலவே மிலிட்டரி டிசர்ட் அணிந்து அதில் ஏழாம் நம்பரை பதித்து உடை அணிந்து வருகிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தோனி மகளின் இந்த ஆர்வம் அவர் தந்தையிடம் இருந்து வந்துள்ளது என்று தோனியின் மனைவி கூறியுள்ளார். தோனியை போன்றே அவரது மகள் ஜிவா தோனிக்கும் உலக அளவில் ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஜிவா தோனியின் இந்த செயலை தோனியின் ரசிகர்கள் பாராட்டி கமெண்டுகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement