பள்ளி முடிந்து வீடு திரும்பியதும் என்மகள் எனக்கு செய்த உதவி – தோனியே வெளியிட்ட பதிவு

Ziva
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி வீரரான தோனிக்கு எவ்வளவு ரசிகர் பட்டாளம் இருக்கின்றதோ அதே அளவிற்கு தோனியின் மகளான ஜிவா தோனிக்கும் அதே அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்கிறது. மேலும் ஜிவா தோனி செய்யும் ஒவ்வொரு விஷயமும் இணையத்தில் ஹிட் அடிக்க தவறியதில்லை.

அதே போன்று தற்போது ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட டோனி ராணுவ வகை கார் ஒன்றினை வாங்கி அதிலேயே ராஞ்சி நகரை வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்போது பள்ளி சென்று கொண்டிருக்கும் ஜிவா வீட்டிற்குத் திரும்பியதும் தோனியுடன் இணைந்து அவரது இராணுவ காரை சுத்தம் செய்ய உதவியுள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்த தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

தோனி இந்த வீடியோவினை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே லைக்ஸ்கள் குவிந்தன. மேலும் பலரும் இதற்கு கமெண்ட்டுகளை தெரிவித்து உங்களைப் போல தான் உங்களது மகளும் மிகவும் சிம்பிளாக உதவும் எண்ணத்தோடு இருக்கிறார்கள் என்று கமெண்ட் செய்து இந்த விடீயோவினை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement