5 வயதான நிலையில் தனது தந்தையுடன் இணைந்து விளம்பரத்தில் நடித்துள்ள தோனியின் மகள்

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். தோனி இதன் பிறகு கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது ஐபிஎல் தொடரும் முடிந்துள்ள நிலையில் தோனி தனது பண்ணை வீட்டில் விவசாயம் மேற்கொண்டு வருகிறார். அது மட்டுமின்றி தனது பண்ணை வீட்டில் விளைச்சல் கொடுத்த காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதைத் தவிர்த்து தோனி விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். தோனியின் மனைவி சாக்ஷி தோனி எப்பொழுதுமே சமூக வலைதளங்களில் தோனி தனது மகள் ஜிவாவுடன் விளையாடும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கமாக வைத்திருப்பார். இதனால் தோனியின் மகள் ஜீவாவிற்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர். இந்நிலையில் தோனியின் 5 வயது மகள் ஜீவாவும் தோனியும் இணைந்து முதல் முறையாக ஒரு விளம்பரத்தில் நடித்து இருக்கின்றனர்.

- Advertisement -

டோனி மற்றும் ஜீவா இருவரும் இணைந்து கேட்பரி ஓரியோ பிஸ்கட் விளம்பரத்தில் நடித்து இருக்கின்றனர். #OreoPlayPledge என்ற விளம்பரத்தில் இருவரும் நடித்திருக்கின்றனர். இந்த விளம்பரத்தின் மூலம் ஒவ்வொருவரும் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தேவைப்படும் வேடிக்கையான தருணங்களை உருவாக்க உறுதிமொழி எடுப்பதை மையமாக கொண்டு இருக்கிறது.

மேலும் இந்த விளம்பரம் போன்களை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இதில் தோனி மற்றும் அவரது மகள் ஜீவா இருவரும் ஒரு கேக்கின் மீது ஓரியோ பிஸ்கட்டை ஒவ்வொன்றாக அடிக்கி வைத்து ஒவ்வொரு உறுதிமொழிகளை எடுப்பதாக நடித்திருக்கின்றனர்.

ஏற்கனவே சமூக வலைதளங்களில் தோனியின் மகள் ஜீவாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கும் நிலையில் தற்போது இந்த விளம்பரம் மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஜீவாவிற்கு பாராட்டை பெற்று கொடுத்து வருகிறது. இது குறித்து பேசிய தோனி தனது மகள் ஜீவா முதன் முதலில் ஒரு விளம்பரத்தில் நடித்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த விளம்பரத்தில் நடித்ததன் மூலம் மகிழ்ச்சி அடைகிறேன் என்று டோனி கூறியுள்ளார்.

Advertisement