MS Dhoni : ரிஷப் பண்டிற்கு அ,ஆ,இ,ஈ தமிழ் சொல்லிக்கொடுத்த தோனியின் மகள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருக்கின்றதோ அதே அளவிற்கு அவருடைய மகள் ஜிவா தோனிக்கும் அவரது மழலை கலந்த குறும்பிற்காக

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருக்கின்றதோ அதே அளவிற்கு அவருடைய மகள் ஜிவா தோனிக்கும் அவரது மழலை கலந்த குறும்பிற்காக தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது.

மைதானத்திலும், மைதானத்தின் வெளியேயும் தோனியின் மகள் செய்யும் குறும்பு வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் ஹிட்டடித்து வருகின்றன. இந்நிலையில் புதிதாக தோனியின் மகள் தமிழ் பேசும் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

அந்த வீடியோவில் ஒரு அறையில் ரிஷப் பண்ட் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க அவருக்கு தமிழில் உள்ள உயிரெழுத்துக்களை சொல்லித் தருகிறார் தோனியின் மகள் அதனை பண்ட் திரும்ப சொல்கிறார்.

தோனி மகளின் இந்த செயல் சென்னை ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. அவரின் தமிழ் ஆர்வம் காரணமாக தமிழ் மொழி கற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த வீடியோவினை சி எஸ் கே ரசிகர்கள் அதிக அளவில் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement