இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தோனியின் மகளான ஜிவா வின் விடியோக்கள் பல வெளியாகின. அத்துடன் ஐபிஎல் போட்டியின் போதும் தனது ஒய்வு நேரத்தை தனது மகள் ஜிவாவுடனே கழித்து வந்தார் தோனி. சமீபத்தில் தோனி அளித்த பேட்டி ஒன்றில் கிரிக்கெட் தான் முக்கியம் என்று நினைத்திருந்த என்னை எனது மகள் தான் மனிதனாக மாற்றினார்’ என்று சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றிலும் குறிப்பிட்டிருந்தார் .
தோனியின் மனைவி சாக்ஷியும் இந்திய அணிக்கு ஒரு சிறந்த ரசிகையாக இருந்து வருகிறார். அதே போல நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் தனது கணவருக்காக சென்னை ஆடிய பெரும்பாலான போட்டிகளை நேரில் கண்டு ஆதரவளித்து வந்தார். மேலும் , தோனியின் மகள் ஜிவாவும் தனது தந்தைக்காக உக்காமளித்து வந்த வீடியோ பல வெளியாகி பிரபலமடைந்து.
இந்நிலையில் நேற்று நடந்த இயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஹர்திக் பாண்டியாவை, டோனி மகள் ஜிவா உற்சாகப்படுத்திய வீடியோ ஒன்றை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த விடியோவை தோனியின் மனைவி சாக்ஷி படம் பிடித்துள்ளார். மேலும், அந்த பதிவில் ‘எனக்கு ஒரு சியர் லீடர் கிடைத்துவிட்டார் ‘ என்று ஹர்திக் பாண்டியா குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்த விடியோவை பலரும் லைக் செய்து வருகின்றனர்.