நாலரை வயதில் என் மகள் என்னிடம் என்ன கேட்கிறார் தெரியுமா ? சூப்பரான மேட்டரை சொன்ன – தல தோனி

Ziva

இந்திய கிரிக்கெட் அணி வீரரான தோனிக்கு இருக்கும் ரசிகர்களுக்கு இணையாக அவரது மகள் ஸிவா தோனிக்கும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தனது மகள் ஸிவா ஆகியோரின் புகைப்படத்தை பதிவிட்டு தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில் ரன்வீர் மற்றும் ஸிவா ஆகியோர் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கூலிங் கிளாசை அணிந்துள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தை பதிவிட்ட தோனி அதில் குறிப்பிட்டதாவது : ரன்வீர் ஏன் எனது கூலிங் கிளாஸ் போட்டு இருக்கிறார் என்று ஸிவா என்னிடம் கேட்டால் பிறகு மாடிக்கு சென்று அவளது கூலிங் கிளாசை தேடி கண்டுபிடித்து என்னுடைய கூலிங்கிளாஸ் என்னிடம் தான் இருக்கிறது என்று கூறினாள்.

இந்த காலத்து குழந்தைகள் வித்தியாசமானவர்கள் நாலரை வயதில் நான் கூலிங் கிளாஸ் எல்லாம் அணிந்தது கிடையாது. ஆனால் ஸிவா இப்போது அனைத்தையும் தெளிவாக கேட்கிறாள். மேலும் அடுத்த முறை அவள் ரன்வீரை நேரில் சந்திக்கும் போது கண்டிப்பாக நீங்கள் அணிந்திருந்த கூலிங்கிளாஸ் போன்று என்னிடமும் உள்ளது என்று கூறுவாள் என்று குறிப்பிட்டுள்ளார்.