
நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் முடிவடையும் வேளையில் நாளையில் இருந்து சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற இருக்கின்றன. மொத்தம் 20 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளன.
அந்த வகையில் பி பிரிவில் இடம் பெற்றிருந்த இலங்கை மற்றும் ஜிம்பாப்வே ஆகிய இரண்டு அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. ஆனாலும் நேற்று நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 38-வது லீக் ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவிக்க அதனை தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஜிம்பாப்வே அணி ஒரு மாபெரும் வரலாற்று சாதனையுடன் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அதாவது இந்த டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்று ஆட்டங்களில் எந்த ஒரு தோல்வியையுமே சந்திக்காமல் அடுத்த சுற்றுக்கு ஜிம்பாப்வே அணி தகுதி பெற்றுள்ளது.
இதையும் படிங்க : அந்த 2 பேரை சமாளிச்சா தான் இந்திய அணியை வீழ்த்த முடியும்.. தெ.ஆ வீரர்களுக்கு – ஷான் பொல்லாக் அட்வைஸ்
இப்படி ஜிம்பாப்வே அணி தோல்வியே சந்திக்காமல் ஒரு டி20 உலககோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகளில் இருந்து அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் ஏற்கனவே ஜிம்பாப்வே அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அவர்களை இந்த தொடரில் இருந்தே வெளியேற்றிருந்தது.