இங்கிலாந்து தொடரில் அஷ்வின் விளையாடாதது நியாயமா ? ரசிகரின் கேள்விக்கு – ஜாஹீர் கான் பதில்

Zaheer
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களில் தமிழக சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படாதது குறித்து சமூக வலைதளத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. மேலும் முன்னாள் வீரர்கள், நிபுணர்கள், ரசிகர்கள் என பலரும் அஸ்வின் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற தங்களது ஆதரவைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை.

Ashwin

- Advertisement -

மேலும் அது குறித்து பேசிய கேப்டன் கோலி கூறுகையில் : இந்தப் போட்டியில் அஷ்வினை சேர்க்கத்தான் நினைத்தோம். ஆனால் இப்போது நான்காவது வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருக்க வேண்டிய அவசியம் இருப்பதனால் அஸ்வின் இடம்பெறவில்லை என்று தனது கருத்தினை வெளிப்படுத்தினார்.

ஆனால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதனால் அஸ்வின் கிடைக்கவில்லை என்றாலும், 3வது டெஸ்ட் போட்டி நடக்கும் இந்த லீட்ஸ் மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும் என்று தெரிய வந்தும் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காதது தற்போது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்த விமர்சனங்களையும் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

Ashwin

இந்நிலையில் அஸ்வின் நீக்கப்பட்டது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் கான் ரசிகர்களின் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார். அதன்படி ரசிகர்கள் கேட்ட கேள்வியில் ஆஸ்திரேலிய கண்டிஷனை காரணம் காட்டி அந்த அணி ஷேன் வார்னை எப்போதாவது ஒதுக்கியது உண்டா ? மேட்ச் வின்னரை கண்டிஷன் காரணம் காட்டி ஒதுக்குவது ஏன் ? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜாகிர் கான் கூறுகையில் :

Ashwin

மேட்ச் வின்னர்கள் எப்போதும் வின்னர்கள் தான். அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. ஷேன் வார்ன் விளையாடிய காலத்தில் ஆஸ்திரேலியாவில் அவர் மட்டுமே ஒரே ஒரு ஸ்பின்னர். ஆனால் தற்போது இந்திய அணியில் ஜடேஜா, அஸ்வின் என இரண்டு ஸ்பின்னர்கள் இருப்பதனால் கண்டிஷனை கருத்தில் கொண்டு ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். நமது அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாதது தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என ஜாஹிர் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement