ரோஹித் சர்மா விஷயத்தில் என்ன நடந்தது ? அவரது காயம் குறித்த தகவலை கூறிய – ஜாஹீர் கான்

Zaheer
- Advertisement -

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டமிட்டிருந்தது. அதன்படி தற்போது ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரரான ரோகித் சர்மா இடம்பெறவில்லை. மேலும் ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு இடையே அவருக்கு டெஸ்ட் தொடரில் மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் அவர் பங்கேற்பாரா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

indvsaus

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமாக ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரின்போது தொடைப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த ரோகித் பிளேஆப் சுற்று மற்றும் இறுதிப் போட்டியில் விளையாடினார். இதனை கருத்தில் கொண்டு இந்திய அணி நிர்வாகம் அவரது பெயரை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இணைக்கவில்லை. இந்நிலையில் இந்த தொடரில் ஏன் ரோகித் சர்மா இடம்பெறவில்லை என பல்வேறு தரப்பில் இருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு பதிலளித்த இந்திய அணி நிர்வாகம் அவர் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ஓய்வு எடுத்துக்கொண்டால் மட்டுமே டெஸ்ட் தொடரில் முழுவதுமாக விளையாட முடியும் என்று ஒரு மழுப்பலான பதிலைக் கூறி இருந்தது. மேலும் கோலி முதல் டெஸ்ட் போட்டியுடன் நாடு திரும்புவதால் மீதி உள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா கேப்டனாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரோஹித்தின் ரசிகர்கள் சற்று அமைதி அடைந்தனர். இருப்பினும் டெஸ்ட் போட்டிகளிலும் இப்போது அவர் விளையாடவில்லை என்று பரவலாக ஒரு பேச்சு எழுந்து வருகிறது.

rohith

இந்நிலையில் ரோகித் சர்மாவின் காயம் குறித்த முக்கிய தகவலை மும்பை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாஹீர் கான் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கூறுகையில் : ஐ.பி.எல் தொடரில் சில போட்டிகளில் ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியில் இருந்தார். ஆனால் அவரை பரிசோதித்து பார்க்கையில் டி20 போட்டிகளில் விளையாடும் அளவிற்கு அவர் நன்கு குணமடைந்து இருந்தார். அதனால் அவர் மும்பை அணியின் பிளே ஆப் சுற்று போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டிகளில் விளையாட வைத்தோம்.

- Advertisement -

அதன் பிறகு சில நாட்கள் ஓய்வில் இருந்த அவர் நேரடியாக தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று பயிற்சிகளை தொடங்கிவிட்டார். தற்போது வரை அவரின் காயத்தின் தன்மையைப் தெரியப்படுத்தாமல் இருப்பது ஏன் ? என்பது எனக்குப் புரியவில்லை. மேலும் அவர் டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதியுடன் இருக்கிறார் என்று கருதுகிறேன். பிசிசிஐ இந்த இடத்தில் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றே கூற வேண்டும். வீரர்களுக்கும் நிர்வாகத்துக்கும் இடையே ஒரு தொடர்பு இருக்க வேண்டும்.

rohith 1

வீரர்களின் காயத்தின் தன்மை எவ்வாறு இருக்கிறது என்பதை கேப்டன் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும். ஆனால் கோலியிடம் அந்தத் தெளிவு இல்லை. ரோஹித் எப்போது குணமடைவார் என்பதை கிரிக்கெட் நிர்வாகம் தெளிவாக தெரிவிக்க வேண்டும். மும்பை அணியில் விளையாடிய ரோஹித் இறுதிப்போட்டியில் கிட்டத்தட்ட 70 ரன்கள் அடித்து அவர் உடல் தகுதியை நிரூபித்தார். ஆனால் காயத்தை முன்வைத்து ரோஹித்தை அணியில் இருந்து நீக்கியுள்ளனர். இது ஏன் என்பதும் எனக்குப் புரியவில்லை.

எது எப்படி இருப்பினும் வருகிற 11ஆம் தேதி அவரின் இரண்டாம் கட்ட பரிசோதனைக்குப் பிறகு பிசிசிஐ என்ன முடிவு எடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என ஜாஹீர் கான் பேட்டியளித்துள்ளார். இதற்கு முன்னதாக பேசிய ரோஹித்தின் நிலைமை குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி ரோகித் உடல் தகுதி குறித்த முழு விவரம் எனக்கு தெரியவில்லை. மேலும் உரிய முறையில் எனக்கு சரியான தொடர்பும் இல்லை என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement