தோனி கேப்டன்சியில் இவரை பின்பற்றுவதாலே அவரால் ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட முடிந்தது – ஜாஹீர் கான் வெளிப்படை

Zaheer
- Advertisement -

தோனி மற்றும் சௌரவ் கங்குலி ஆகிய இருவரும் ஒரே மாதிரி கேப்டன்கள் தான் என முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன் யார் என்று டோனி மற்றும் கங்குலி ரசிகர்கள் இடையே அவ்வப்போது விவாதம் நடந்து கொண்டேதான் இருக்கிறது. சமூக வலைதளங்களில் ஒருபுறம் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டாலும், புள்ளி விவரங்கள் அனைத்தும் தோனிதான் மிகச் சிறந்த கேப்டன் என்று ஆணித்தரமாக நிரூபிக்கின்றன.

sourav-ganguly-ms-dhoni

- Advertisement -

இந்நிலையில் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் கங்குலி மற்றும் தோனியின் தலைமை எப்படி இருந்தது என்று பேசியுள்ளார். இருவருக்கும் கீழாக பல போட்டிகளில் ஆடியுள்ளார் ஜாஹிர். இது குறித்து பேசியதாவ்து : சர்வதேச அரங்கில் ஒரு அறிமுக வீரர் விளையாடும் போது அவருக்கு கங்குலியை போன்ற ஒரு கேப்டன் தேவைப்படுவார்.

அவரது தியாகமும் முதிர்ச்சியான உந்துதலும் என்னை போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட காரணமாக இருந்துள்ளது. தோனி மற்றும் கங்குலி ஆகிய இருவரும் அணியை நீண்ட காலமாக வழி நடத்தி உள்ளனர்.ஒரு பக்கம் தோனி இந்திய அணிக்கு தலைமை ஏற்றபோது அந்த அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர்.

Ganguly

அவருக்கு அந்த வீரர்களை தயார் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. ஆனால் ஒவ்வொருவராக ஓய்வு பெறத் துவங்கியவுடன், தோனி சாமர்த்தியமாக புதிய வீரர்களை களமிறக்கினார்.அந்த கட்டத்தில் கங்குலி என்ன செய்தாரோ, அதையே தான் தோனியும் செய்தார். இளைஞர்களை நன்றாக ஊக்கப்படுத்தினார்.

- Advertisement -

இருவருமே சர்வதேச அரங்கில் இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர்கள் என்றும் இளம் வீரர்களை ஊக்குவிப்பதில் ஒரே மாதிரியான கேப்டன்கள் தான் என்றும், அவர்கள் இருவருமே அவர்களது காலகட்டத்தில் சிறந்த கேப்டன்கள் என்றும் சாமர்த்தியமான பதிலை கூறியுள்ளார் ஜாகிர் கான்.

Dhoni-1

தோனி தற்போது இந்திய அணிக்கு திரும்பும் நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் கங்குலி பி.சி.சி.ஐ யின் தலைவராக இருந்து பல்வேறு அதிரடியான முடிவுகளை எடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement