டெஸ்ட் போட்டியில் இனி இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது – ஜாஹீர் கான் ஓபன்டாக்

Zaheer
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியதை தொடர்ந்து படு தோல்வி அடைந்து பின்தங்கி உள்ளது. இந்த போட்டிக்கான தோல்வியில் இந்திய பேட்ஸ்மேன்களின் பங்கு அதிகம் என்றே கூறலாம். ஏனெனில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட நிலையில் 2-வது இன்னிங்சில் போது பேட்ஸ்மேன்கள் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை, மேலும் அடுத்தடுத்து வீரர்கள் ஆட்டம் இருந்து வெளியேறியதால் இந்திய அணி 36 ரன்களில் இரண்டாவது இன்னிங்சில் சுருண்டது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Ind

- Advertisement -

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் வீரர்கள் யாரும் 10 ரன்கள் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த போட்டியில் பிரிதிவி ஷாவின் ஆட்டம் சர்ச்சையாக மாறியுள்ளது. ஏற்கனவே அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டபோது அவர் மீது மோசமான விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில் இந்த போட்டியில் களமிறங்கிய அவர் முதல் இன்னிங்சில் டக் அவுட் ஆகியும், இரண்டாவது இன்னிங்சில் 4 ரன்கள் எடுத்த நிலையில் எடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில் தற்போது அவரின் இந்த ஆட்டத்தை குறித்து பலரும் விமர்சித்து வர இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் கான் அவரது ஆட்டம் குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் : ப்ரித்வி ஷா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சியுள்ள போட்டிகளில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரது ஆட்டம் படு மோசமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Shaw

தவறுகளை திருத்திக் கொண்டால் மட்டுமே இனி வரும் தொடர்களில் அவர் இடம்பெறுவார் என்றும் இனி இந்திய அணியில் நிச்சயமாக அவர் சேர்க்கப்பட மாட்டார் என்று தனது கருத்தினை காட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ப்ரித்வி ஷா நிச்சயம் அணியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் அவரது கருத்தினை தெரிவித்து உள்ளது குறிப்பிட்டிருந்தார்.

Shaw-1

முதல் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் கிளீன் போல்டான ப்ரித்வி ஷா பீல்டிங்கிலும் சொதப்பலான செயல்பாட்டையே வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலிய வீரர் கொடுத்த எளிதான கேட்சை தவற விட்ட அவர் அப்போதே இணையத்தில் விமர்சிக்கப்பட்டு இருந்தாலும் ரசிகர்கள் பலரும் இப்போது மீண்டும் அவர் மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு அவரை அணியில் சேர்க்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement