இந்திய கிரிக்கெட் அணி புதிய பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் தடுமாற்றமாகவே விளையாடி வருகிறது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் இந்திய அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று வருகிறது. ஆனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது.
அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாட உள்ளது. அதற்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. முன்னதாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் துவக்க வீரர்கள் மட்டுமே நிலையாக களமிறங்குவார்கள் மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் விளையாடுவார்கள் என்று கௌதம் கம்பீர் கூறியுள்ளார். இந்நிலையில் இந்த அணுகுமுறை முக்கியமான போட்டியில் உங்களை சாய்க்கலாம் என்று கௌதம் கம்பீரை முன்னாள் வீரர் ஜஹீர் கான் எச்சரித்துள்ளார்.
ஜஹீர் கான் எச்சரிக்கை:
மேலும் ராகுல் டிராவிட் போல கௌதம் கம்பீர் இல்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் வளைவுத்தன்மையை கொண்டிருக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள். நம்பர் 1, 2 அங்கே நிலையாக விளையாடுவார்கள். ஆனால் மற்றவர்கள் வளைவுத் தன்மையுடன் விளையாடுவார்கள் என்று சொல்கிறீர்கள்”
“அதற்குள் சில விதிமுறைகளும் இருக்கிறது. அதற்கு நீங்கள் சில வரம்புகளையும் தொடர்புகளையும் பின்பற்றுவது முக்கியம். இல்லையெனில் நீங்கள் இந்திய அணிக்குள் வீரர்களிடம் பாதுகாப்பின்மையை உருவாக்குகிறீர்கள். அவ்வாறு செய்வது சில நேரங்களில் மீண்டும் வந்து உங்களுக்கு வலியைக் கொடுக்கும். எனவே நீங்கள் அதை விரும்ப மாட்டீர்கள்”
ட்ராவிட் மாதிரி இல்ல:
“அதை நீங்கள் சமாளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். ராகுல் டிராவிட்டின் அணுகுமுறையை கௌதம் கம்பீரின் அணுகுமுறையுடன் ஒப்பிட்டு பார்த்தால் நிலைமை மாறும். அது நன்றாக அல்லது மோசமாக இருக்கிறது என்று சொல்லலாம். அல்லது அதற்குள் நம்மால் உட்படுத்திக் கொள்ள முடியும் என்று சொல்லலாம்”
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபியில் ஜெய்ஸ்வால் ஆடமாட்டாரு.. பும்ராவுக்கு பதில் அவரை கொண்டு வாங்க.. ஆகாஷ் சோப்ரா
“நீங்கள் எந்த அணுகுமுறையை பின்பற்றினாலும் வெற்றிப் பெறுவதற்கு தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள், கேப்டன் மற்றும் ஆகிய அனைவருமே ஒரே பக்கத்தில் இருக்க வேண்டும். அப்போது தான் சக்கரம் சரியான வழியில் சுழன்று செல்லும்” என்று கூறினார். மொத்தத்தில் சமீபத்திய தோல்விகளால் கடுமையான விமர்சனங்களை சந்தித்த கம்பீர் அடுத்ததாக நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியை பயிற்சியாளராக வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.



