பும்ரா மீண்டும் விக்கெட் வீழ்த்தி தனது ஆதிக்கத்தை செலுத்த இதை செய்தால் போதும் – ஜாகீர் கான் கொடுத்த அட்வைஸ்

- Advertisement -

காயத்துக்கு பிறகு அணிக்கு திரும்பிய இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான பும்ராவின் பந்துவீச்சு சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக 30 ஓவர்கள் வீசிய பும்ரா விக்கெட் வீழ்த்தவில்லை அது மட்டும் இன்றி 167 ரன்கள் விட்டுக்கொடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

Bumrah

- Advertisement -

உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக கருதப்படும் பும்ரா அணிக்கு கவலை அளிக்கும் விதமாக செயல்பட்டு வருவது ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் ஜாகீர்கான் பும்ராவிற்கு தற்போது ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : பும்ராவை எதிரணி பேட்ஸ்மேன்கள் பக்குவமாக ஆட கற்றுக் கொண்டனர். மேலும் அவரது பந்துவீச்சில் கவனமாக விளையாடி மற்றவர்களின் பந்துவீச்சை அடிக்கவே முற்படுகின்றனர்.

இதனை புரிந்து கொண்டு இனி கூடுதல் முயற்சி மற்றும் கூடுதல் ஆக்ரோஷத்தை பேட்ஸ்மேன்களை எதிராக காண்பிக்க வேண்டும். ஏனெனில் இத்தனை ஆண்டுகளாக தன் மதிப்பை உயர்த்திக் கொண்ட பும்ரா அதனை தக்க வைக்க பாடுபடவேண்டும். இதனால் எதிரணி வீரர்களின் நிலையை புரிந்து அவர்களுக்கு எதிராக சற்று கூடுதல் ஆக்ரோஷத்துடன் புதிய திட்டங்களுடன் பந்து வீசினால் அவரால் நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும்.

Bumrah

இதனால் கூடுதல் ரிஸ்க் எடுக்க வேண்டும் அதற்கு அவர் தயாராக வேண்டும் என்றும் ஜாகிர்கான் கூறியது குறிப்பிடத்தக்கது. மற்ற வீரர்கள் இவரது பந்து வீச்சுக்கு மரியாதை அளிப்பது நல்ல குறி தான் என்றாலும் அவர் விக்கெட் வீழ்த்தும் முனைப்பு காட்ட வேண்டும். வெறுமனவே பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் விக்கெட் வீழ்த்துவதுமே தனது பணி என்று உணர்ந்து அவர் பந்து வீசினால் அவரது ஆதிக்கம் நிலைக்கும் என்று ஜாஹீர் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement