கங்குலி இந்திய அணிக்காக என்ன செய்தாரோ அதனை கோலி தற்போது செய்துவருகிறார் – ஜாஹீர் கான் புகழாரம்

Zaheer
- Advertisement -

தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இந்திய அணியின் புதிய கேப்டனாக மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் விராட் கோலி நியமிக்கப்பட்டார். கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய அணி பல்வேறு விதங்களில் முன்னேறி வந்தது. டெஸ்ட் போட்டிகளில் முதல் இடத்தை அடைந்த இந்திய அணி ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்தது.

Kohli-1

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் அரையிறுதி வரை சிறப்பாக ஆடி அரையிறுதி தோல்வி பெற்ற இந்திய அணி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர், தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர் என வெளிநாட்டு சுற்றுப் பயணங்களிலும் விராட் கோலி தலைமையில் வெற்றிபெற்றது. இந்நிலையில் விராட் கோலியின் இந்த கேப்டன்சி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஜாஹீர் கான் பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

இந்திய அணி நாங்கள் விளையாடிய காலத்தில் டெஸ்ட் போட்டிகளில் வெளிநாட்டு பயணங்களின் போது வெற்றி பெற மிகவும் சிரமப்படும். அப்போது கங்குலி கேப்டன் ஆன பிறகு வெளிநாடுகளில் நம்மால் ஏன் சாதிக்க முடியாது நமது திறமையை வெளிப்படுத்துவோம் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்று வீரர்களுக்கு ஊக்கத்தைக் கொடுத்து அவரது ஆக்ரோஷமான செயல்பாடுகள் மற்றும் அதிரடியான முடிவுகள் மூலம் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

Kohli-1

அதனைப் போன்றே தற்போது தனது ஆக்ரோஷமான செயல்பாடுகள் மற்றும் அதிரடியான முடிவுகள் மூலம் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தருகிறார் கோலி. தற்போது உள்ள இந்திய டெஸ்ட் அணி உலகத்திலேயே சிறந்த டெஸ்ட் அணி என்று நான் கூறுவேன். ஏனெனில் பந்துவீச்சு அவ்வளவு பலமாக நம்மிடம் உள்ளது. கோலி கண்டிப்பாக ஒருமுறை உலக கோப்பையை தன் கையில் ஏந்துவார் என்று நம்பிக்கை என்னிடம் உள்ளது என்று ஜாஹீர் கான் கோலியை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement