- Advertisement -
ஐ.பி.எல்

இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் கானுக்கு கிடைத்த புதிய பதவி – அவருக்கான சரியான பதவியும் அதுதான்

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு 10 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் 17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஜாஹீர் கான் ஆலோசகர் :

அந்த வகையில் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் அடுத்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக தற்போது ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் உள்ள நிர்வாக குழுவினரை மாற்றி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு அணிகளின் பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டு இந்திய பயிற்சியாளர்கள் தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது லக்னோ அணியில் முக்கிய மாற்றமாக அந்த அணியின் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாஹீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான அதிகாரவபூர்வ அறிவிப்பும் அந்த அணி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. லக்னோ அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக செயல்பட்ட மோர்னே மோர்கல் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக அந்த பதவிக்கு யாராவது புதிய நபரை தேர்வு செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இருந்த வேளையில் தற்போது லக்னோ அணியின் ஆலோசகராக ஜாஹீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணிக்காக கடந்த 2000-வது ஆண்டு அறிமுகமான ஜாஹீர் கான் 2014-ஆம் ஆண்டு வரை 92 டெஸ்ட் போட்டிகள், 200 ஒருநாள் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடி 600 க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதையும் படிங்க : ஐ.சி.சி-யின் புதிய தலைவராக மாறியது மட்டுமின்றி வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஜெய் ஷா – விவரம் இதோ

அதுமட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் நல்ல அனுபவம் கொண்ட அவர் மும்பை இந்தியன்ஸ், டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகளுக்காக 100 போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -