கோலி அனுஷ்காவை அடுத்து பெற்றோர்களாக மாறப்போகும் அடுத்த இந்திய தம்பதி – விவரம் இதோ

anushka

இந்திய அணிக்காக 2014ஆம் ஆண்டு வரை கடந்த 14 வருடங்களாக விளையாடியவர் ஜாகிர் கான் தற்போது இவருக்கு 42 வயதாகிறது. மொத்தம் 92 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 311 விக்கெட்டுகளும், 200 ஒருநாள் போட்டிகளில் ஆடி 282 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமின்றி 100 ஐபிஎல் போட்டிகளிலும் ஆடி இருக்கிறார் ஜாஹிர் கான்.

Zaheer-Khan

தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு சகாரிகா என்ற மகாராஷ்டிரா நடிகையுடன் திருமணம் ஆனது. இவர் 2007 ஆம் ஆண்டிலிருந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தார். இருவருக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தவுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் இவர்களது குடும்பத்திற்கு தற்போது ஒரு நல்ல செய்தி வந்து சேர்ந்திருக்கிறது. இருவரும் பெற்றோர்களாக மாறப் போகிறார்கள். தற்போது சகாரிகா ஒரு குழந்தைக்கு தாயாக போவதாக குடும்பத்தின் நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. முன்னதாக விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகிய தம்பதியினரும் இந்த வருடம் பெற்றோராக மாற போவதை உறுதி செய்துள்ளனர்.

zaheer sagarika

அனுஷ்கா ஷர்மா – கோலி தம்பதிக்கு குழந்தை பிறக்க இருப்பதை அவர்களே அதிகாரபூர்வமாக தெரிவித்தனர். ஆனால் ஜாஹீர் கான் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும் இந்த செய்தி நூறு சதவீதம் உண்மை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து தகவல் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

zaheer sagarika 1

இப்படிப் பார்த்தால் ஜாகிர் கான் – சகாரிகா மற்றும் விராட் கோலி அனுஷ்கா சர்மா ஆகிய இரண்டு தம்பதியினருக்கும் அடுத்தடுத்து குழந்தை பிறக்கப்போவது உறுதி ஆகிவிட்டது.